நெற் பயிரில் பச்சைபாசி பரவுதலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்!!



நெற் பயிரில் பச்சைபாசி பரவுதலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்!!


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் மற்றும் கோவிலூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிரில் பச்சைப்பாசி தாக்குதல் பாதிப்பு குறித்து வேளாண் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.


விருதுநகர் மாவட்டம் தேவதானம், அரசு விதைப்பண்ணையில் நெற்பயிர் 40 நாள் பயிராக உள்ளது. மேலும் வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் மற்றும் கோவிலூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகளால் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 



நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட இந்த பகுதிகள் மற்றும் தேவதானம், அரசு விதைப் பண்ணையிலும் பச்சைப்பாசி தாக்குதல் குறித்து விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநரின் அறிவுரையின்படி, 


அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியியல் உதவிப் பேராசிரியர் முனைவர் அகிலா, வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு செ.இராஜேந்திரன், இராஜபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனலெட்சுமி, மற்றும் வட்டார துணை வேளாண்மை அலுவலர் விநாயகமூர்த்தி, 


தேவதானம் அரசு விதைப்பண்ணை மேலாளர் அ.சோமசுந்தரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அடங்கிய குழு வயலாய்வு மேற்கொண்டனர்.



வயலாய்வின் போது வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் மற்றும் கோவிலூர் ஆகிய கிராமங்களில் மற்றும் தேவதானம், அரசு விதைப் பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் பச்சைப்பாசி தாக்குதல் பரவலாக காணப்பட்டது. 


ஆய்வின் போது நெல் பயிரில் பச்சைப்பாசி தாக்குதல் இருப்பதாக வேளாண் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பச்சைபாசி பரவுதலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண் விஞ்ஞானிகள் கருத்துக்களை வழங்கினர். 


நெல் வயல்களில் பச்சைப்பாசி அடர்த்தியாக வளர்ந்து பச்சைப் போர்வை போன்று காட்சி அளித்தது. இந்தப் பாசிகள் நெல்லுக்கு இடப்படும் மணிச்சத்து மற்றும் தழைசத்து உரங்களை அதிக அளவில் எடுத்து கொண்டு வளரும் தன்மை உடையது, எனவே மேற்கண்ட உரங்களை நெல்லுக்கு இடும் போது சரியான அளவில் இட வேண்டும். 



வயல் முழுவதும் பச்சைப்பாசி வளர்வதால் நெற்பயிரின் வேர் பகுதியில் காற்றோட்டத்தை முழுமையாக குறைத்து விடும். இதனால் வேர்களின் சுவாசிக்கும் திறன் குறைந்து விடும். 


மேலும் வேர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சத்துக்களை எடுத்து கொள்ளாத நிலை ஏற்படுவதால், நெற்பயிர் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக தூர் பாகம் அழுகியபடி காணப்படும். 


இறுதியில் நெற்பயிர்கள் கருகி விடும் அபாயம் உருவாகிறது. இதனை கட்டுப்படுத்திட கீழ்கண்ட வழிமுறைகளை தவறாது பயன்படுத்திட வேண்டும்.


கோனோவீடர் கொண்டு நெல் வரிசைகளுக்கு இடையில் உள்ள பாசிகளை மண்ணில் புதையுமாறு மடக்கிக்கி உழ வேண்டும். பின்பு நேரடியாக மயில் துத்தக் பொடியை (காப்பர் சல்பேட்) (1 கிலோ/ஏக்கர்) பாசிகளின் மேல் படும்படி தூவ வேண்டும்.


வயலில் நீரை வடிகட்டிய பிறகு மயில் துத்தக் கரைசலை (0.5 சதவீதம்) (5 கிராம்/1லிட்டர் தண்ணீர்) பாசிப்படலத்தின் மேல் படும்படி 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.



இத்த வழிமுறைகளை பின்பற்றி நெல் பயிரில் பச்சைப்பாசி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என வேளாண் விஞ்ஞானிகள் வாயிலாக விவசாயிகளுக்கு நேரில் தொழில் நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது. 


மேற்கூறிய இவ்வழிமுறைகளை கையாண்டு நெல் பயிரில் ஏற்படும் பச்சைப்பாசி தாக்குதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.


மேலும் படிக்க....


தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!


உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறும் வானிலை மையம் எச்சரிக்கை!!


விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் ரூ.2000 வழங்கும் அரசு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments