குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் பெற சூரிய காந்தி சாகுபடி மேலாண்மை முறைகள்!!
நாம் உணவு தானிய உற்பத்தியில் முழுநிறைவு அடைந்த போதிலும், எண்ணெய்வித்து பயிர் உற்பத்தியில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதனால் சமையல் எண்ணெய்யை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளளோம்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான, வேளாண்மைத்துறை எண்ணெய்வித்து சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை, எள் பயிர்க்கு அடுத்த படியாக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
சூரியகாந்தி எண்ணெய் தற்போது பெரும்பாலான மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று உள்ளது. அத்தைகய முக்கியத்துவம் வாய்ந்த சூரியகாந்தி பயிர் அரியலூர் மாவட்டத்தில், தா.பழூர் மற்றும் திருமானூர் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிர் சித்திரை வைகாசி பட்டத்தில் விதைப்பு செய்யப்பட உள்ளது.
நிலம் தயார் செய்தல்
வயலை சட்டி கலப்பை அல்லது கொக்கி கலப்பை கொண்டு நன்கு உழுது பின்னர் ரொட்டவேட்டர் கொண்டு புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டன் வரையிலான தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரங்கள் இட வேண்டும்.
மேலும் கடைசி உழவின்போது டிஏபி உரம் ஏக்கருக்கு 75 கிலோ மற்றும் ஜிப்சம் 80 கிலோ இட்டு உழவு செய்யவேண்டும். தனியார் நிறுவன வீரிய ஒட்டு விதை இரகங்கள் ஏக்கருக்கு 2 கிலோ போதுமானது. பின்னர் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை 2 சதவீதம் சிங்சல்பேட் கரைசலில் 12 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
பின்னர் நிழலில் உலர்த்தி, டிரைக்கோடைர்மா விரிடி என்ற பூஞ்சான உயிர்க்கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் கலந்து விதைக்க வேண்டும். மேலும் ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம் ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா இவற்றை ஆறிய அரிசி கஞ்சியில் கலக்கி ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து நிழலில் உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும்.
சூரியகாந்தி விதையை பாத்திகள் அல்லது சால்களில் வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளியிலும், செடிக்கு செடி ஒரு அடி இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும். பொதுவாக மாலை நேரத்தில் விதைப்பு மேற்கொண்ட உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.
விதை விதைப்பு செய்தல்
மதிய வேளை மற்றும் கடும் வெயில் நேரங்களில் விதைப்பு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பின்னர் 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றுடன் 10 கிலோ மக்கிய தொழு உரம் கலந்து சீராக தூவ வேண்டும். பின்பு 5 கிலோ நுண்ணூட்ட கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக இடவேண்டும்.
களைமேலாண்மை மட்டும் உரமிடுதல்
விதைப்பு செய்த 15-20ம் நாள் கை களை எடுத்த பின்னர் முதல் மேலுரமாக ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 20 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். இதே போன்று 35-40ம் நாளில் இரண்டாவது மேலுரம் இடவேண்டும்.
இதை அடுத்து 30 மற்றும் 60-ம் நாட்களில் என்ஏஏ (NAA) பிளோனோபிக்ஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மிலி வீதம் கலந்து நன்கு நனையும்படி ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூக்களில் அதிக மணிகள் பிடிக்க சூரியகாந்தி பூ மலர்ந்த 55-60 நாட்களில் மெல்லிய பருத்தி துணியை கைகளில் சுற்றி கொண்டு பூக்களின் மேல் லேசாக தடவி விட வேண்டும். இதனால் மகரந்த சேர்க்கை நடைபெற்று அதிக மணிகள் பிடிக்கும்.
அறுவடை மற்றும் மகசூல்
பூக்கள் மலர்ந்து 85-90 நாட்களில் முற்றிய பின்னர் அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு குறைந்தது 800 கிலோ முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50% சதவீத மானியத்தில் டிரைகோடெர்மா விரிடி மற்றும் உயிர் உரங்களை வாங்கி பயன்பெறலாம்
மேலும் விவசாயிகள் மேற்கூரிய தொழில் நுட்பங்களை பின்பற்றி கூடுதல் வருமானம் பெற வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்
படிக்க....
மாற்றுப் பயிர் சாகுபடி முறையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்!!
விவசாயிகளுக்கு PVC குழாய் மற்றும் மின்சார மோட்டார் வாங்க ரூ.25,000 மானியம்!!
“கிசான் ட்ரோன்” திட்டத்தின் கீழ் வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம் அமைச்சர் அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...