Random Posts

Header Ads

மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்!!



மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்!!


வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் பற்றிய வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சியானது புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.


புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவக்குமார், தலைமையேற்று மக்காச்சோளமானது நல்ல வருவாய் தரக்கூடிய பயிர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகப் படைப்புழுவின் தாக்குதலால் மகசூலில் பாதிப்பு உண்டானது என்பதனை தெரிவித்து ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைப் பின்பற்றினால் படைப்புழுவினால் ஏற்படும் சேதமில்லாமல் அதிக மகசூல் ஈட்ட முடியும் என எடுத்துரைத்தார். 



வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் த.சசிகுமார், தலைமையேற்று மக்காச்சோளத்தில் படைப்புழுவானது குருத்து மட்டுமல்லாமல், கதிரிலும் சேதத்தை உண்டாக்குவதால் விவசாயிகள் அதிக கவனத்துடன் விதை நேர்த்தி, இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்துதல் போன்ற முறைகளைப் பின்பற்றி படைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்தார். 


உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குநர் மா.பெரியசாமி, வாழ்த்துரை வழங்கினார். வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் சை.முகம்மது ஜலாலுதின், புதிய வகைப் பூச்சிகளின் தாக்கத்திற்கான காரணங்கள் குறித்தும், 



பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா.ரமேஷ், மக்காச்சோளப் படைப்புழுவின் தாக்கமும், தீர்வும் என்ற தலைப்பில் மக்காச்சோளத்தில் படைப்புழுவினால் உண்டாகும் பல்வேறு சேதங்கள், முட்டை, படைப்புழுவின் பல்வேறு வளர்ச்சி நிலைகள், 


கூட்டுப்புழு மற்றும் அந்துப்பூச்சிகள், படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி செய்யும் முறைகள், இனக்கவர்ச்சி பொறிகள் பயன்படுத்தி அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், முட்டை ஒட்டுண்ணி பயன்படுத்தும் முறைகள், 


தாவர பூச்சிக்கொல்லியான வேப்ப மருந்து சார்ந்த அசடிரக்டின் என்ற மருந்தினைப் பயன்படுத்துதல் மற்றும் விதை முளைத்த 20-25 மற்றும் 40-45 நாட்களில் இரு முறை இரசாயன மருந்துகள் பயன்படுத்துதல் குறித்து தொழில் நுட்பவுரையாற்றினார்.


முன்னதாக தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் மு.மதியழகன், வரவேற்புரையாற்ற, பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா.ரமேஷ் நன்றியுரையாற்றினார். 



மேலும் இப்பயிற்சியில் மக்காச்சோளத்தில் படைப்புழுவிவைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்த கண்காட்சியானது அமைக்கப்பட்டிருந்தது. 


இதில் 50க்கும் மேற்பட்ட வேளாண் விரிவாக்க அலுவலர்கள் குறிப்பாக புதியதாக நியமனம் செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

மேலும் படிக்க....


குறைந்த வட்டியில் பிணையம் எதுவும் கேட்காமல் தொழில்கடன்! அரசு வழங்கும் டாப் 5 கடன்கள்!!


நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி ஊக்குவிப்பு! விதைகள் மானியத்தில் வழங்கப்படும்!!


தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments