குறைந்த வட்டியில் பிணையம் எதுவும் கேட்காமல் தொழில்கடன்! அரசு வழங்கும் டாப் 5 கடன்கள்!!
சொந்தத் தொழில் செய்யும்போது கிடைக்கும் ஆனந்தமும், பெருமையும், அடிமைத்தொழிலில் கிடைக்காது. இதன் காரணமாகத்தான் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு கனவாக இருக்கிறது.
இப்படி ஒரு கனவு உங்களிடையே இருக்கிறதா? அந்தக் கனவை நனவாக்க, மத்திய அரசு சார்பில் இந்த 5 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பிணையம் எதுவும் கேட்காமல் தொழில்கடன் கிடைக்கிறது.
முக்கிய 5 வங்கிக்கடன்கள்
MSME லோன்
செயல்பாட்டு மூலதனக் கடனை மையமாகக் கொண்டு மத்திய அரசால் இந்தக் கடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.1 கோடி நிதியுதவியுடன் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வணிகங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்து பயன்பெறலாம்.
விண்ணப்பம் பெறப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஒப்புதல் செய்யப்படுகிறது. 8 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மகளிர் தொழில்முனைவோர் இட ஒதுக்கீடு 3 சதவீதம் ஆகும். கடன் செயலாக்க நேரம் 8 முதல் 12 நாட்கள் வரை
கடன் உத்தரவாத நிதி திட்டம்
இந்த திட்டம் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பிணையம் எதுவும் கேட்காமல் கடன் வழங்குகிறது.
செயல்பாட்டு மூலதனக் கடன்கள்
ரூ.10 லட்சம் பிணையம் இல்லாமல் லோன்கள் வழங்கப்படுகிறது. நிலம் மற்றும் கட்டிடங்கள் போன்ற சொத்துக்களின் முதன்மை பிணையம் மற்றும் அடமானம் உள்ளிட்டவைகளை போன்றது.
முத்ராக்கடன்
சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் லோன் தருவதற்கான முன்முயற்சியை முத்ரா எடுத்துள்ளது. உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறையில் செயலாற்றும் சிறு அல்லது குறு வணிக நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்குகிறது.
பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், சிறு வங்கிகள், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் இதற்க்கு கடன் பதிவு செய்யப்படுகிறது.
3 பிரிவுகள்
சிஷு கடன்கள் : ரூ.50,000
கிஷோர் கடன்கள் : ரூ.5,00,000
தருண் கடன்கள் : ரூ.10,00,000
கடன் இணைப்பு மூலதன மானியத் திட்டம்
இந்தக் கடனில் உங்கள் வணிகத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கான நிதியும் அடங்கும். அடிப்படை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற பல்வேறு செயல்முறைகளை மறுசீரமைக்க கடன் இணைப்பு மூலதன மானியத் திட்டம் பயன்படுகிறது.
SME கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், பொருட்களை வழங்குவதற்கும் உற்பத்திச் செலவும் குறைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தகுதியான வணிகங்களுக்கு சுமார் 15% சதவீத மூலதன மானியத்தை வழங்கி வருகிறது.
கடன் வரம்பு ரூ 15 லட்சம்
தகுதி
உரிமையாளர் வணிகம், கூட்டாண்மை நிறுவனம், கூட்டுறவு அல்லது தனியார் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.
தேசிய சிறுதொழில் கழக மானியம்
இந்த மானியம் மூலப்பொருள் உதவித் திட்டத்தைத் தேர்வு செய்வதாகும். அப்பொழுது வணிகத்திற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விலைக்கு வணிகம் நிதியளிக்க முடியும். சந்தைப்படுத்தல் உத்தியுடன், வணிக சலுகைகளுக்கான போட்டி சந்தை மதிப்பை உருவாக்க இந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும்
படிக்க....
விவசாயிகளுக்கு PVC குழாய் மற்றும் மின்சார மோட்டார் வாங்க ரூ.25,000 மானியம்!!
“கிசான் ட்ரோன்” திட்டத்தின் கீழ் வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம் அமைச்சர் அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும்
நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன்
அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த
லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன்
செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...