Random Posts

Header Ads

மாற்றுப் பயிர் சாகுபடி முறையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்!!



மாற்றுப் பயிர் சாகுபடி முறையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்!!


இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். மாற்றுப் பயிர் சாகுபடி முறையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி அவர்கள் தெரிவித்தார். 



வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகை உள்ளிட்டவைகளை மாற்றுப் பயிராக சாகுபடி செய்யும் திட்டத்திற்கு, பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


பயிர்களுக்கு இடையில் ஊடுபயிர்


தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு இடையில், ஊடுபயிராகவும்; வயல், வரப்புகளில் மாற்றுப் பயிராகவும் இவற்றை சாகுபடி செய்து, விவசாயிகள் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 



மொபைல் போன் வாயிலாக, விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் 'டிஜிட்டல்' வேளாண்மை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 'தமிழ் மண் வளம்' என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகளும்  வழங்கப்பட்டுள்ளது.


பொருட்கள் உற்பத்திக்கு மட்டுமின்றி சந்தைப் படுத்துதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.சிறு தானியங்கள் உற்பத்தியை பெருக்குவதற்கு மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. 


துவரம் பருப்பு, சோயா உற்பத்தி போன்றவைகளை ஊக்குவிக்கும் வகையில் சில திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பனை மேம்பாட்டு இயக்கம் வாயிலாக, முந்தைய பட்ஜெட்டில் பனை விதைகள் வழங்கியுள்ளோம் என்றார்.


பட்ஜெட்டில் பனை பொருட்கள்


இந்த பட்ஜெட்டில் பனை விதைகள் மட்டுமின்றி, பனை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும், இவற்றை சார்ந்துள்ள மக்கள் வருமானம் பெறவும் திட்டங்களை அறிவித்து உள்ளோம். 



விவசாயிகள் பலர் ஒரே இரவில் இயற்கை விவசாயத்திற்கு மாறியதால், சில நாடுகளில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம் தற்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு PVC குழாய் மற்றும் மின்சார மோட்டார் வாங்க ரூ.25,000 மானியம்!!


தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!


நெற் பயிரில் பச்சைபாசி பரவுதலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments