பருவமழையால் பாதிக்கப்பட்ட 48,593 விவசாயிகளுக்கு ரூ.51 கோடி நிவாரணம்! முதல்வர் உத்தரவு!!
வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட 48,593 விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 14.11.2022 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும், நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக அதிகமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533.4630 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43,92,01,750.50 வழங்கிடவும், மேலும் கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 5,222.192 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 8562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.6,96,82,473.50 என மொத்தம் ரூ.50,88,84,224-ஐ 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கிட, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க 0.10 ஹெக்டேருக்கு ரூ.50,000 மானியம்!!
பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்! குவிண்டாலுக்கு அதிக பட்சம் எவ்வளவு!!
வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...