வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!
தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குறிப்பாக தேனி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை சுமார் 0.96 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 4.50 மில்லியன் மெ.டன்னாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகத்திலுள்ள 15க்கு மேற்பட்ட இரகங்கள் பயிரிட்டாலும் (பூவன், கற்பூர வள்ளி, ரஸ்தாளி, ரொபஸ்டா) கிராண்ட் நைன் (ஜி9) அதிகமாக பயிரிடப்படுகிறது.
சாகுபடியில் பின்பற்ற வேண்டிய முக்கியமான தொழில்நுட்பங்கள்
நிலத்தேர்வு, நல்ல வடிகால் வசதி உள்ள வளமான நிலம் வாழைக்கு ஏற்றது. கிழங்கு தேர்வு, 1500 கிராம் எடையுள்ள நல்ல தரமான கிழங்குகளை தேர்வு செய்து நடுமுன் கிழங்குகளின் மேல் தோலை சீவி பின்பு (பூச்சி, பூஞ்சான கொல்லி மருந்து கலந்த கலவையில்) முக்கி நட வேண்டும். திசு வளர்ப்பு கன்றுகளை (G9) இரகத்திற்கு பயன்படுத்தலாம். மண் பரிசோதனை படி உரமிடலாம்.
நுண்ணூட்ட சத்துகள்
வாழைக்கு நுண்ணூட்ட சத்துகளின் தேவை இருப்பதால் (BANANA SATHI) (10- 15) கிராம்/லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழி தெளிப்பு செய்யலாம். நட்ட 4, 5, 6 மாதங்களில் இலையின் மீது தெளிக்க வேண்டும். பொதுவாக வாழை கன்றுகள் தட்ட 7 மாதங்கள் அல்லது 9, 10 மாதங்களில் தார்போடும்.
வாழைக்காய்களின் திறட்சியான வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், தாரில் கடைசி சீப்பு வெளிவந்த ஒரு வாரம் கழித்து, கடைசி சீப்பிலிருந்து 15லிருந்து 20 செ.மீ நீளத்திற்கு பூக்காம்பை விட்டு, ஆண் பூவை கத்தி கொண்டு வெட்டி நீக்கி விட வேண்டும்.
பொட்டாசியம் சல்பேட் 20 கிராம்/லிட்டர் கலந்து தார் மீது தெளிக்க வேண்டும். செடியிலிருந்து உணவு பொருட்களை தாருக்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக விளங்குவது கொன்னையாகும்.
அதிக வெப்பமாக கொன்னை அழுகல், காய்கள் பிஞ்சிலேயே பழுத்தல் போன்ற நிகழ்வதை தடுக்க, கண்ணாடி இலை அல்லது உறைகளை கொண்டு கொன்னையை மூடுதல் அவசியம்.
தாருக்கு (கரும்புள்ளி, சிராய்ப்பு) போன்றவை காய்களில் ஏற்படதாவறு தாருக்கு 18 GSM தடிமனான பாலிப் புரோப்பிலீன் துணி பைகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் எதிர்பார்க்க மகசூலை அடையலாம். வாழையில் சாதனை படைக்கலாம்.
தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண்மை ஆலோசகர், அருப்புக்கோட்டை, 94435 70289.
மேலும் படிக்க....
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகள் வயல்வெளி பள்ளி பயிற்சி!!
விவசாயிகளுக்கு கூடுதலாக, 20 சதவீதம் மானியம்! வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்!!
இனி விவசாயிகள் விளைபொருட்களை அடகு வைத்து ரூ. 75 லட்சம் வரை கடன் பெறலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...