பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்! குவிண்டாலுக்கு அதிக பட்சம் எவ்வளவு!!


பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் பருத்திக்கான ஆதரவு விலையை நடுத்தர நீளம் கொண்ட பஞ்சுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,080 எனவும், நீண்ட நீளம் கொண்ட பஞ்சுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,380 எனவும் , 2022-23-ஆம் பருவத்துக்கு (1.10.22-30.9.23) குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் அதிகமாகும்.



உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 64 பேர் கலந்து கொண்டுள்ளனர். இத்திட்டத்தில் ரூ.19,798 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் 2.45 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



ஜவுளித்துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா இதுவரை 13 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.



மக்களவையில் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.


மேலும் படிக்க....


நெல் III மற்றும் ராபி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு பிரீமியத் தொகை ரூ.497!!


பருத்தியில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?


வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post