பருத்தியில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
பருத்தியில் மகசூல் இழப்பிற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையானது பூச்சிகளின் தாக்குதல் ஆகும். பருத்தியை சுமார் 200 வகையான பூச்சிகள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தினாலும், சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, அசுவிணி, வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, இலைப்பேன் போன்றவற்றால் மகசூல் இழப்பு ஏற்படுகின்றது. தத்துப்பூச்சிகளால் மட்டுமே 18-24 சதவீத அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.
இளம் மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலைகளுக்கு அடியிலும், இலை நரம்புகளுக்கு இடையேயும் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுவதால், இலைகளின் ஓரங்கள் முதலில் மஞ்சளாகவும், பின்னர் பழுப்பு நிறமாகவும் மாறத் தொடங்குகின்றன. மேலும், இலைகளானது கீழ்நோக்கி சுருண்டு காணப்படும். இதனால் செடியின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். தத்துப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும் பொழுது, இலைகளானது காய்ந்து உதிர்ந்து விடுகின்றன.
தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ள மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை இலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.
- இமிடாகுளோபிரிட் (17.8 எஸ்எல்) 100-125 மிலி
- அசிட்டமிபிரைடு (20 எஸ்பி) 50 கிராம்
- பிப்ரோனில் (5 எஸ்சி) 1500-2000 மிலி
- தயமீதாக்சம் (25 டபிள்யுஜி) 100 கிராம்
- தயகுளோபிரிடு (21.7 எஸ்சி) 100-125 மிலி
கைத்தெளிப்பானை பயன்படுத்தும் பொழுது, ஒரு எக்டருக்கு தேவையான மருந்தினை 500 லிட்டர் தண்ணீருடனும், விசைத்தெளிப்பானை பயன்படுத்தும் பொழுது 150 லிட்டர் தண்ணீருடனும் கலந்து தெளிக்க வேண்டும் என தொழில் நுட்ப வல்லுநா் (பயிர்ப் பாதுகாப்பு), முனைவர் கு.இளஞ்செழியன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவர் ச.வள்ளல் கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க....
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்!!
மாண்டஸ் புயலில் இருந்து தென்னையை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!!
ஆதார் இணைப்பை உறுதி செய்தால் மட்டுமே PM கிசான் 13வது தவணை வேளாண் இணை இயக்குனர் அறிவுரை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...