கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்!!
பொதுவாக டிசம்பர் மாதம் வந்தாலே, நமக்கு புயலின் தாக்கம் வருகின்றன என்பது கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் தாக்குதலால் நமக்கு ஒரு அச்சம் புயல் மீது ஏற்பட வைக்கிறது. முதலில் புயல் எவ்வாறு உருவாகிறது என்பதை பார்ப்போம்.
சாதாரணமாக வெப்ப நிலை மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகின்றன. எப்பொதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது, லேசான காற்று மேலே செல்லுகிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்லும்.
அந்த காற்று செல்லும் வேகம் காரணமாக புயல்கள் உருவாகின்றன. முதன்முறையாக புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர்கள் ஆஸ்திரேலியர்கள். 1950க்கு பிறகு அமெரிக்காவும் பெயர் சூட்டத் தொடங்கியது.
பொதுவாக கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நாடுகள் ஒன்றினைந்து பெயர்கள் வைக்கும் முறை ஏற்பட்டது. 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் இயற்கை சீற்றங்களின் தகவல்கள் பெறுவதில் குழப்பத்தை தவிர்க்க புயல் பெயர் வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் அரபிக்கடல், வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு, இந்திய மண்டலத்தில் உள்ள 13 நாடுகள் இணைந்து 164 பெயர்கள் அடங்கிய புயல் பட்டியலை தயாரித்து அகரவரிசையில் பெயர் வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது வந்துள்ளன புயலின் பெயர் “மாண்டஸ்” (MANDOUS). இந்த பெயரை தேர்வு செய்த நாடு ஐக்கிய அரசு அமீரகம் (U.A.E).
- புயலின் பல்வேறு பெயர்கள்
- HURRICANE, (சூறாவளி)
- TORNADO (சுழன்றடிக்கும் சூறாவளி)
- TYPOON (சூறாவளி)
- CYCLONE (புயல்)
இன்னும் சில வகையான பெயர்கள் பல்வேறு நாடுகளில் புயலை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. புயலைப் பற்றி தெரிந்து கொண்டோம். எச்சரிக்கையாக விவசாயிகள் உரமிடுதல், பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், அறுவடை பணிகளை இந்த காலத்தில் மேற்கொள்ள கூடாது. அரசு அறிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைப்படி பாதுகாப்பாக இருப்போம், இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை பாதுகாப்போம்.
தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை, 94435 70289.
மேலும் படிக்க....
மாண்டஸ் புயலில் இருந்து தென்னையை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!!
ஆதார் இணைப்பை உறுதி செய்தால் மட்டுமே PM கிசான் 13வது தவணை வேளாண் இணை இயக்குனர் அறிவுரை!!
வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...