மாண்டஸ் புயலில் இருந்து தென்னையை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!!


மாண்டஸ் புயலில் இருந்து தென்னையை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தஞ்சை மாவட்ட மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூலம் மாண்டஸ் புயலின் நகர்வு வேகம் மற்றும் விளைவு பற்றி தமிழக அரசு அறிக்கைகளை பெற்று இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறைகளுக்கும் அறிவுரைகள் வழங்கி வருகிறது. 



மாண்டஸ் புயலின் தாக்கம் கனமழையுடன் எட்டாம் தேதி இரவு முதல் 9 மற்றும் 10ஆம் தேதி வரை நமது டெல்டா மாவட்டத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேளாண் துணை அலுவலர் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் அடங்கிய குழு அனைத்து கிராமங்களுக்கும் கை ஒலிபெருக்கியுடன் சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


முக்கியமாக தென்னை விவசாயிகள் நன்கு முதிர்ச்சி அடைந்த தேங்காய்களையும் இளநீர் காய்களையும் உடனடியாக மரத்திலிருந்து பறித்திட அறிவுறுத்தப்பட்டது மேலும் தென்னை மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மட்டைகளை அகற்றுவதன் மூலமும் தென்னை மரத்தில் உள்ள அதிகப்படியான பாரமானது குறைக்கப்படுகிறது. 



வேகத்துடன் வீசும் காற்று மரத்தின் அடிப்பகுதியை எவ்வித பாதிப்பும் இன்றி கடந்து செல்லும். மேலும் வயதான மரங்கள் மற்றும் வேரின் மீது நிற்கும் மரங்கள் போன்றவைகளின் ஸ்திரத்தன்மை அதிகரிக்க மரத்தின் அடிப்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு தென்னந்தோப்பில் நீர் பாய்ச்சுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 


ஏனெனில் பெய்கின்ற கனமழையும் தோப்பில் இருக்கும் நீரும் மரத்தின் அடிப்பகுதியில் இளக்கம் கொடுத்து குறைந்த வேகத்தில் அடிக்கும் காற்றுக்கும் மரம் விழுந்து விட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் மேற்கண்ட அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்தி நமது ஆயுள் காலபயிரான தென்னையை பாதுகாத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. 



மேலும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இன்னும் ஒரு வாரத்திற்கு உரமிடுதல் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணம் செலவழித்து பயிருக்கு அளிக்கும் உரம் மற்றும் பூச்சி மருந்துகள்  மழையில் கரைந்து வீணாக வெளியேறும். 


நமக்கு பயன்படாது எனவே விவசாயிகள் தங்கள் சந்தேகங்களுக்கு உடனடியாக தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.



மேலும் படிக்க....


ஆதார் இணைப்பை உறுதி செய்தால் மட்டுமே PM கிசான் 13வது தவணை வேளாண் இணை இயக்குனர் அறிவுரை!


வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!


விவசாயிகளுக்கு கூடுதலாக, 20 சதவீதம் மானியம்! வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post