நெல் III மற்றும் ராபி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு பிரீமியத் தொகை ரூ.497!!
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அழைப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் III (நவரை) மற்றும் ராபி நிலக்கடலை, கரும்பு பருவத்திற்கு மத்திய மாநில அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சேர்ந்து பலன் பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ), கெ.ஏழுமலை தெரிவித்தார்.
இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரான நெல் (நவரை), நிலக்கடலை, கரும்பு பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டதில் சேர தகுதி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் உட்பட அனைவரும் இத்திட்டதில் சேரத் தகுதி உள்ளவர்கள் ஆவர். பயிர்கடன் பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரிலும் சேரலாம்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC தகவல்களுடன் கூடிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா, நடப்பு சாகுபடி அடங்கல், முன் மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம் ஆகியவற்றுடன் கீழ்க்கண்ட காப்பீட்டு பிரீமியத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
- நெல் (நவரை) பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ. 497 பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ. 33150, பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 31.01.2023.
- நிலக்கடலை பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ. 454, பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ. 30250, பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 31.01.2023.
- கரும்பு பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ. 2750, பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.55000, பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 31.01.2023.
மேலும் விரிவான விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவர்களை தொடர்பு கொண்டும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து, விவசாயிகள் பலன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கெ.ஏழுமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
பருத்தியில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
ஆதார் இணைப்பை உறுதி செய்தால் மட்டுமே PM கிசான் 13வது தவணை வேளாண் இணை இயக்குனர் அறிவுரை!!
வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...