சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக் கருவிகள் விநியோகம் பயன்பெற அழைப்பு!!
சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை மானிய விலையில் வழங்கும் திட்டமானது நடப்பாண்டிலும் செயல்படுத்த அரசாணை வரப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து பண்ணைக் கருவிகள் அடங்கிய தொகுப்பானது சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதற்காக, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட வேளாண் இடுபொருள் கொள்முதல் குழு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, சிவகாசி வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு 555 எண்கள் வரப் பெற்றள்ளது.
விவசாயிகள் தங்கள் அன்றாட வேளாண் பணிகளில் பயன்படுத்தும் கடப்பாரை, இரும்புச் சட்டி, மண்வெட்டி, களைக் கொத்து, இரண்டு கதிர் அரிவாள் ஆகியவை அடங்கிய தொகுப்பானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றது.
ஒரு விவசாய குடும்பத்திற்கு ஒன்று மட்டுமே வழங்கப்படவுள்ளது. முறையான உழவர் அட்டை பெற்றுள்ள விவசாய தொழிலாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
விருப்பமுள்ள விவசாயிகள் குடும்ப அட்டை, ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிட்டா மற்றும் சிறு குறு விவசாயி சான்றுடன் உழவன் செயலியில் பதிவு செய்தோ, வேளாண் விரிவாக்க மையத்தினை நேரில் அணுகியோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டோ பயன் பெறலாம் என விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க....
நெல் III மற்றும் ராபி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு பிரீமியத் தொகை ரூ.497!!
பருத்தியில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...