அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 225 பண்ணை குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள்!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டார புளியக்குடி பஞ்சாயத்தில் குடும்பத்திற்கு இரண்டு தென்னங்கன்றுகள் அட்மா திட்ட தலைவர் இளங்கோவன் வழங்கிட ஊராட்சி மன்ற தலைவர் தென்னங்கன்றினை நடவு செய்தார்.
மதுக்கூர் வட்டாரம் புளியங்குடி பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 225 பண்ணை குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ மற்றும் புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி மூலம் வழங்கப்பட்டது.
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி முன்னிலையில் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அட்மா திட்ட அலுவலர் ராஜு மற்றும் தஞ்சாவூர் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்புடன் புளியக்குடி கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலைஞர் திட்ட உழவன் போர்டலில் தனித்தனியாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் புளியங்குடி கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அவர்களின் விபரங்களும் போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பிற துறை அலுவலர்களும் தங்கள் திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்து வழங்குவது மிக எளிதாகும்.
மேலும் இன்றைய தினம் புளியங்குடி கிராமத்தில் சோயா சாகுபடி முனைப்பு இயக்கமும் நடத்தப்பட்டு தைப்பட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் சோயா சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் 50% மானிய விலையில் சோயா விதைகள் மற்றும் டிவிரிடி வழங்குவது பற்றியும் எடுத்து கூறப்பட்டு அதற்கான தொழில் நுட்ப செய்தி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் சூரிய பிரியா மூலம் வழங்கப்பட்டது.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியத்தில் வம்பன் எட்டு விதைகள் வழங்கப்படுவது குறித்து எடுத்துரைத்தார். பின் அகிலா எனும் பயனாளியின் நிலத்தில் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் நடவு செய்வது குறித்த செயல் விளக்கம் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் செய்து காட்டினார்.
புளியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி ஒரு தென்னங்கன்றினை நடவு செய்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி செய்திருந்தார்.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி புளியங்குடி கிராம விவசாயிகளுக்கு சோயா குறித்த சாகுபடி துண்டு பிரசுரத்தை வழங்கினார். மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ புளியகுடி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா!!
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கலைகொல்லி தாங்கி வளரக்கூடிய பருத்தி ரக விதைகளுக்கு தடை!!
2023-24 வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு, விவசாயிகள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...