மரபணு மாற்றம் செய்யப்பட்ட கலைகொல்லி தாங்கி வளரக்கூடிய பருத்தி ரக விதைகளுக்கு தடை!!
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கலைகொல்லி தாங்கி வளரக்கூடிய பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - தஞ்சாவூர் விதை ஆய்வு விதை இயக்குனர் எச்சரிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தஞ்சாவூர் விதை ஆய்வு விதை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் விதை ஆய்வு விதை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் வட்டாரங்களில் சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட உள்ளது. சம்பா நெல் அறுவடைக்கு பின், விவசாயிகள் பருத்தி விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நேரத்தில், விதைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தனியார் விதை விற்பனை நிலையங்களில் கும்பகோணம் விதை ஆய்வாளர் அவர்களால் அலுவலக விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் பருத்தி விதைகள், தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் விதை பரிசோதனை நிலையத்திற்க்கு முளைப்பு திறன் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு பின், விதை தேர்ச்சி அறிக்கை அறிவிக்கப்பட்டு, தரமான விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மரபணு பருத்தி ரக விதைகள் தஞ்சாவூர் மாவட்டத்தில், மத்திய அரசின் அனுமதி பெறாத, களைக்கொல்லி தாங்கி வளரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகளை, தனியார் பருத்தி விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில், தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கலைகொல்லி தாங்கி வளரக்கூடிய பருத்தி ரக விதைகள் விற்பனை மற்றும் சாகுபடி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏனெனில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத களைக்கொல்லி தாங்கி வளரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்வது மற்றும் அதை வாங்கி சாகுபடி செய்வது விதைச்சட்டம் 1966-ன் படி விதி மீறல் செயலாகும்.
இது குறித்து சென்னை விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை இயக்குனர் ஆணைப்படி மாவட்டந்தோறும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர், விதைச்சான்று உதவி இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இச்செயலில் ஈடுபடும் விதை உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விதை விற்பனை நிலையங்கள் மீது விதைச்சட்டம் 1966, விதைகள் விதி 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் விதை ஆய்வு விதை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க....
2023-24 வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு, விவசாயிகள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு!!
தமிழ்நாடு சிறுபான்மையினர் கடன் வாங்க விண்ணப்பிக்கலாம்! அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன்!!
60 சதவீத மானியத்தில் 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மானியம் பெறுவது எப்படி?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...