விதை முதல் அறுவடை வரை தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல்வெளி பள்ளி!!
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் புலவஞ்சி கிராமத்தில் நெல் வயல்வெளி பள்ளி தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள புலவஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல் வெளிப்பள்ளி நடைபெற்றது.
ஆறு வகுப்புகள் கொண்ட இந்த பயிற்சியில் விதை முதல் அறுவடை வரை நெல்லில் ஒருங்கிணைந்த முறையில் செய்யப்பட வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள் விதை நேர்த்தி யூரியா உரத்தினை ஜிப்சம வேப்பம் புண்ணாக்கு கலந்திடுதல் மாட்டு கோமியம் கொண்டு தயாரிக்கப்படும் களைக்கொல்லி மற்றும் மீன் அமினோ அமிலம் தயாரிப்பு போன்றவை பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
விவசாயிகளை வயல்வெளியில் அழைத்துச் சென்று பூச்சிகளை பிடிக்க செய்து நன்மை செய்யும் பூச்சி தீமை செய்யும் பூச்சிகளை கண்டறியவும் நன்மை செய்யும் பூச்சிகள் அதிகம் இருக்கும் பட்சத்தில் தேவையற்ற பூச்சிக்கொல்லி தெளிப்பதை தவிர்ப்பது பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.
பைசல் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய விளக்க கையேடு வழங்கப்பட்டது மேலும் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி குறித்த திட்டம்பற்றி இத்திட்டத்தின் கீழ் 50 செய்த மானியத்தில் ஒரு ஆதார் கார்டுக்கு எட்டு கிலோ உளுந்து விதை வழங்கப்படுவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் நெல் உளுந்து மக்காச்சோளம் ராகி குதிரைவாலி நிலக்கடலை ஆகியவற்றுக்கு 50 சத மானியத்தில் உரத்துடன் கூடிய இடுபொருள்கள் வழங்குவது பற்றி எடுத்துக் கூறப்பட்டது.
வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் நெல் நுண்ணூட்டம் இடுவதின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார் இதில் முன்னோடி பயிற்றுநர் ஜெகஜோதி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி காய்ச்சல் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
50% மானிய விலையில் எட்டு கிலோ உளுந்து!! 100% மானியத்தில் இரண்டு நெட்டை தென்னங்கன்றுகள்!!
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...