மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்! நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விசைத்தெளிப்பான்கள்!!


தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் சொக்கநாவூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் சொக்கனாவூர் கிராமத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் தலைமையில் இன்றைய தினம் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. 



முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை வேளாண்துறை தோட்டக்கலைத்துறை ஆதிதிராவிட நலத்துறை, குழந்தைகள் நலத்திட்ட அலுவலகம் கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான மற்றும் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்களை பற்றி எடுத்து கூறினர். 


மேலும் வேளாண் பொறியியல் துறை வேளாண் துறை கால்நடைத்துறை தோட்டக்கலை துறை மூலம் கருத்துக்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்  பழனிமாணிக்கம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ மற்றும் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். 




வருவாய் பேரிடர் மேலாண்மை துறை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான தலைமையிலான அலுவலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ரூபாய் எழுபது லட்சத்துக்கு மேல் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் விவசாயிகளிடம் பொதுமக்களிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றனர். 


பேரிடர் மேலாண்மை துறை மூலம் பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வேளாண் துறை மூலம் கலைஞர் திட்டத்தின் கீழ் ஆறு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் ஆறு விவசாயிகளுக்கு தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான்கள் 50% மானியத்தில் வழங்கப்பட்டது. 




நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆத்மா திட்ட தலைவர் ஆகியோர் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பொறுப்பு மக்ஷற்றுமா வட்டாட்சியர் இராமச்சந்திரன் தலைமையிலான அலுவலர் குழுவினர் செய்திருந்தனர். 


சொக்கனாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


சம்பா பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ₹560 கோடி இழப்பீடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post