விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை புள்ளியியல் உதவி இயக்குனர் அபிராமன் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சியை வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு நடத்தினார்.
பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பயிற்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புள்ளியல் துறை பட்டுக்கோட்டை கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் அபிராமன் தலைமையில நடைபெற்றது.
புள்ளியல் துறை சேர்ந்த மதுக்கூர் புள்ளியியல் ஆய்வாளர் கார்த்தி, பட்டுக்கோட்டை வட்டார புள்ளியல் ஆய்வாளர் சுபலட்சுமி சேது பாவ சத்திரம் புள்ளியியல் ஆய்வாளர் சியாமளாதேவி மற்றும் பட்டுக்கோட்டை புள்ளியியல் ஆய்வு அலுவலர் சித்ரா ஆகியோர் கலந்துகொண்டு வட்டார அளவில் பயிர் மதிப்பீட்டு வாழ்வில் கல அளவில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வேளாண் உதவி அலுவலர்களுடன் கலந்துரையாடினர்.
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சேர்ந்த அனைத்து கள அலுவலர்களுக்கும் உணவு தானிய உற்பத்தி திறனை நிர்ணயிக்கும் பொருட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கலப்பு பயிர் மற்றும் தனி பயிர்களுக்கான பயிர் அறுவடை மகசூல் கணக்கிடும் முறைகள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை தளைகளை தேர்வு செய்யும் முறைகள்குறித்து புள்ளியியல் உதவி இயக்குனர் அபிராமன் விளக்கிப் பேசினார்.
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் பயிற்சி அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை மதுக்கூர் மற்றும் பேராவூரணி சேதுபாவசத்திரத்தை சேர்ந்த புள்ளியியல் ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
பயிற்சியில் சேதுபாவா சத்திரம் வேளாண் உதவி இயக்குனர் சாந்தி, துணை வேளாண்மை அலுவலர் மற்றும் பட்டுக்கோட்டை அப்சரா உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்களும் அனைத்து வட்டாரங்களில் இருந்து கலந்து கொண்டனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
100% மானியத்தில் ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி மற்றும் 25 கிலோ பொட்டாசு உரம்!!
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு 100 சத மானியத்தில் இரண்டு தென்னங்கன்றுகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...