தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் ஆவிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வினியோகம். தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள ஆவிக்கோட்டை பஞ்சாயத்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அனைத்து விவசாய குடும்பங்களின் பொது விபரங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ள விவசாயிகளின் விபரங்கள் மற்றும் விவசாயிகள் தற்சார்பு அடைய தேவையான இடுபொருட்கள் விபரம் மற்றும் ஆவி கோட்டை ஊராட்சியில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் தேவை குறித்தும்,
வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் ஊராட்சி மன்ற தலைவர் வேழவேந்தன் மற்றும் முன்னோடி விவசாயிகள் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டு உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட 300 விவசாயிகளுக்கும் ரூ120வீதம் தலா இரண்டு தென்னம்பிள்ளைகள் 100% மானியத்தில் வழங்கப்பட்டது.
மேலும் மண்வள அட்டை திட்டத்தின் கீழ் நூறு மண் மாதிரிகள் விவசாயிகளிடமிருந்து மண் ஆய்வுக்காக பெறப்பட்டது. தென்னங்கன்றுகள் நடவு முறை மற்றும் பராமரிப்பு பற்றிய துண்டு பிரசுரமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மத்திய மற்றும் மாநிலத் திட்டங்களில் மானியம் போன்ற விபரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி தமிழ்நாடு மண்வள போர்டல் மூலம் விவசாயிகள் தங்கள் கிராமங்களில் உள்ள சாகுபடி நிலங்களின் சர்வே நம்பர் வாரியாக சத்துக்களை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பது பற்றி எடுத்துக் கூறினார்.
வேளாண்மை அலுவலர் இளங்கோ மற்றும் வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பது பற்றி விளக்கிக் கூறினர்.அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா அய்யா மணி ராஜு மற்றும் சிசி அலுவலர் இளமாறன் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தென்னங்கன்றுகள் மற்றும் இதர இடுபொருள்கள் பெறுவதற்கு உழவன் செயலில் பதிவு செய்தும் ஆண்ட்ராய்டு செல்போன் விவசாயிகளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊராட்சி மன்ற தலைவர் வேழவேந்தன் மற்றும் முன்னோடி விவசாயிகள் சேகர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
வைக்கோல் கொள்முதல் செய்ய அலைமோதும் வியாபாரிகள்!
வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!
விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...