விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டார வேளாண்மை துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாய உபகரணங்கள் வழங்க இருபதால் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு.
விவசாயிகளுக்கு மானிய விலையில், விவசாய உபகரணங்களை அளித்து வருகிறது அரசு. இந்நிலையில், இம்மாதிரியான செய்திகள் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பது தான் கவலையளிக்கிறது. அவ்வகையில், 50% மானியத்தில் விவசாய உபகரணங்களை வாங்க விவசாயிகள் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50% மானியம்
தமிழ்நாடு அரசு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, காங்கயம் வட்டார வேளாண்மை துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நத்தக்காடையூர், பழையகோட்டை, பரஞ்சேர்வழி ஆகிய 3 கிராம ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் அடங்கிய தொகுப்பான,
1. கடப்பாரை
2. மண்வெட்டி
3. களைக் கொத்து
4. கதிர் அரிவாள்
5. காரை சட்டி
மேலும் விசை தெளிப்பான், தார்ப்பாய் உட்பட விவசாய பணிகளுக்கு தேவையான பண்ணை கருவிகள் 50% சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. ஆகவே நத்தக்காடையூர் பகுதி ஊராட்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவதற்கு இப்பகுதி விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணகளான,
1. கணினி சிட்டா
2. ஆதார் நகல்
3. வங்கி புத்தக நகல்
4. குடும்ப அட்டை நகல்
5. சிறு, குறு விவசாயி சான்று
6. பாஸ்போர்ட் அளவு போட்டோ
ஆகியவற்றை நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகி சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நத்தக்காடையூர் உதவி வேளாண்மை அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் மண்புழு உரதொட்டி!!
அதிகாலைப் பனியினால் உளுந்தில் அதிகரிக்கும் சாம்பல் நோய் மற்றும் அதன் கட்டுப்பாடு முறைகள்!!
விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பவர் ஸ்பிரேயர் மற்றும் கால்நடை சிறப்பு முகாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...