தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் மண்புழு உரதொட்டி!!
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரதொட்டி மானியத்தில் வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் கன்னியாகுறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலாஜி ரகுநாத சமுத்திரம் கன்னியாகுறிச்சி உட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் நிலை 4 கீழ் இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நெல் உளுந்து சாகுபடி மற்றும் நிலக்கடலை சாகுபடிக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் செயல்படும் கிராமங்களில் விவசாயிகள் தங்கள் உரத்தேவையில் தற்சார்பு நிலையினை அடையும் பொருட்டு ஆர்வமுள்ள விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 7800 மதிப்பில் அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் தொட்டி, அதனை நிழலால் மூடி வைப்பதற்கு பாலிதீன் நிழல் வலை மற்றும் தொட்டியை நிறுத்தி வைப்பதற்கு நீளமான கம்புகள் நாளு எண்களும் ரூபாய் 6000 மானியத்தில் வழங்கப்பட்டது.
விவசாயிகள் பங்கு தொகை ரூபாய் 1800 க்கு வழங்கப்படுகிறது. இன்றையதினம் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய பட்ட விவசாயி வேம்பரசிதமிழரசன் அவர்களுக்கு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வழங்கப்பட்டது.
மேலும் விவசாயிகளுக்கு மண்புழுஉரம் தயாரிப்பது குறித்தும் வெவ்வேறு பயிர்களுக்கு விடவேண்டிய மண்புழு உரத்தின் அளவு மண்புழு உரத் தொட்டியை பராமரிப்பது போன்றவை பற்றி வேளாண் உதவி இயக்குனர் மருத்துவர் விளக்கி கூறினார்.
பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் மண்புழு உரத்தின் பயன்பாடு மற்றும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். கிராம சபை கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி மற்றும் துணைத் தலைவர் குணசேகரன் செய்திருந்தார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
நெல் கொள்முதல் நிலைய பணிகள் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் திடீர் ஆய்வு!!
விதை முதல் அறுவடை வரை தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல்வெளி பள்ளி!!
50% மானிய விலையில் எட்டு கிலோ உளுந்து!! 100% மானியத்தில் இரண்டு நெட்டை தென்னங்கன்றுகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...