விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பவர் ஸ்பிரேயர் மற்றும் கால்நடை சிறப்பு முகாம்!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர் மற்றும் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.
மதுக்கூர் வட்டாரம் பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் வேளாண் துறை மற்றும் கால்நடை துறையுடன் இணைந்து கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெற்றது இதில் 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் ஆலோசனைகளை டாக்டர் ரூபவாஹினி அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பாலாஜி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் பாலாஜி கோட்டை கிராமத்தை சேர்ந்த 19 விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் 16 லிட்டர் பவர் ஸ்ப்ரேயர்களை பின்னேர்ப்பு மானிய அடிப்படையில் வழங்கினார்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் அட்மாதிட்ட அலுவலர் ராஜு ஆகியோர் முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பவர்ஸ்பிரேயர்களை வழங்கியதுடன் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிற திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினர்.
முன்னோடி விவசாயிகள் அடைக்கலம் ராஜேந்திரன் வடுவம்மாள் மற்றும் தீபிகா திருஞானம் உள்ளிட்ட விவசாயிகள் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும் படிக்க....
நெல் கொள்முதல் நிலைய பணிகள் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் திடீர் ஆய்வு!!
விதை முதல் அறுவடை வரை தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல்வெளி பள்ளி!!
50% மானிய விலையில் எட்டு கிலோ உளுந்து!! 100% மானியத்தில் இரண்டு நெட்டை தென்னங்கன்றுகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...