கோடை பருவத்துக்கு ஏற்ற நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை!!
கோடை பருவத்துக்கு ஏற்ற நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் அறுவடைக்குப்பின் தற்போது கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்யும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீலநிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். விவர அட்டையில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம், உற்பத்தியாளர் விவரம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும், விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் இன்வாய்ஸ் மற்றும் முளைப்பு அறிக்கை கட்டாயம் பராமரிக்கபட வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.
கோடை பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். குறுகிய கால நெல் ரகங்கள் ஆன ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, கோ 51, ஏஎஸ்டீ 16, டிபிஎஸ் 5 போன்ற ரகங்கள் கோடை பருவத்துக்கு ஏற்ற ரகங்கள் என்பதால், தனியார் விதை விற்பனையாளர்கள் மேற்கூறிய தரமான நெல் ரகங்களின் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விதை சட்ட விதைகளின்படி விற்பனை செய்ய வேண்டும்.
தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் விதை ஆய்வாளர்களால், அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் கோடை நெல் சாகுபடிக்கு கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களில் அலுவலக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இம் மாதிரிகள் தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்திற்கு முளைப்புத்திறன் குறித்த ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தனியார் விதை விற்பனையா8ளர்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்கள் அவசியம் குறிப்பிட வேண்டும்.
எனவே, கோடை பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கோடை பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ அல்லது விற்பனையில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டாலோ, விதை சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ன்கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மேல், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி தனது செய்துகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
நெல் கொள்முதல் நிலைய பணிகள் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் திடீர் ஆய்வு!!
விதை முதல் அறுவடை வரை தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல்வெளி பள்ளி!!
50% மானிய விலையில் எட்டு கிலோ உளுந்து!! 100% மானியத்தில் இரண்டு நெட்டை தென்னங்கன்றுகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...