தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம்!!
வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசைக் காற்றும் இணைவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல், சூறைக்காற்று, ஆலங்கட்டி மழையுடன் மழை பெய்தது.
வந்தவாசியில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 500 தென்னங்கன்றுகள்!!
திருவள்ளூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. சென்னை, புறநகர் பகுதிகளிலும் நேற்று மதியத்துக்கு பிறகு மழை பெய்தது. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் நேற்று இயல்புக்கு மாறாக 2.1 முதல் 4.0 செல்சியஸ்வரையில் வெப்பம் அதிகரித்தது. திருப்பத்தூர், திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3.1 செல்சியஸ் முதல் 5.0 செல்சியஸ் வரையிலும், தஞ்சாவூர்,சென்னை, கடலூர், தர்மபுரி, நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரையில் ெ வப்பம் அதிகரித்து காணப்பட்டது.
அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 21.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், வளி மண்டலத்தில் மேல் நிலவும் காற்றுசுழற்சி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயவாடா, நெல்லூர், திருப்பதி, சென்னை, வேலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதிகள் வரை நீண்டு பரவியிருப்பதால் இந்த பகுதிகளில் மற்றும் நெல்லை - நாமக்கல், போடி நாயக்கனூர்- காரைக்குடி, தஞ்சாவூர்- திருத்தணி வரையும், ஆம்பூர்-புதுச்சேரி ஆகியவற்றில் இடைப்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.
மேலும் படிக்க....
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் மண்புழு உரதொட்டி!!
விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
கனமழையால் பாதிக்கப்பட்ட 9 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.112 கோடி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...