வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு 100 சத மானியத்தில் இரண்டு தென்னங்கன்றுகள்!!


வேளாண்மைத் துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நெம்மேலி கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் 100 சத மானியத்தில் வழங்கப்பட்டது. 

 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருவாரூர் மாவட்டம் நெம்மேலி கிராம ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ரஞ்சனி ராஜராஜன் அவர்கள் செய்திருந்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி.எஸ். திலகவதி அவர்கள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் தங்கள் வயல்களில் மண் மாதிரியினை சேகரித்து வழங்குமாறும் மற்றும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் இடுபொருள் பதிவு செய்தல் குறித்தும், உழவன் செயலியில் உள்ள 21 விதமான பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். 


மேலும் வேளாண்மை துறையின் வழிகாட்டுதலின்படி தற்சமயம் நடைபெறவிருக்கும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 27.07.2023 முதல் 29.07. 2023 வரை கேர் பொறியியல் கல்லூரி வளாகம் திருச்சியில் நடைபெற இருப்பதால் அனைத்து விவசாயிகளுக்கும்  கலந்து கொண்டு பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார். 



இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகளான திரு. இருளப்பன், திரு.பெரமையன் திரு .சேதுராமன், திரு. நாராயணசுந்தரம் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் திரு.அண்ணாதுரை மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 


துணை வேளாண்மை அலுவலர் திரு.அன்புமணி அவர்கள் தென்னங்கன்றுகள் பராமரித்தல் குறித்து விவசாயிகளிடம் கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி.சுகிதா மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்தும் பரிந்துரைக்கப்பட்ட உரத்தினை  பயன்படுத்தி  மண்வளத்தினை மேம்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். 



வேளாண்மை உதவி அலுவலர் திரு.முருகேஷ் அவர்கள் மண் மாதிரி எவ்வாறு சேகரிக்க வேண்டும்  என செயல்விளக்கத்தின் மூலம் நேரடியாக விவசாயிகளிடம் காண்பித்தார். 


வேளாண்மை அலுவலர் திரு. இளங்கோவன் அவர்கள் மண் மாதிரி சேகரிக்க தேவையான ஆவண குறிப்புகள் மற்றும் உழவன் செயலில் மண்வளம் அட்டையினை தாங்களே பதிவிறக்கம் செய்தல் குறித்தும் விவசாயிகளிடம் தெரிவித்தார். 



இலவசமாக வழங்கப்படும் தென்னங்கன்றுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு.ராஜு மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் திரு.இளமாறன் ஆகியோர் விவசாயிகளை பதிவு செய்தனர்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்து மற்றும் தென்னங் கன்றுகள் வழங்கும் முகாம்!!


விவசாயிகளின் மண் மாதிரிகள் தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு மண்வள செயலியில் நேரடியாக பதிவேற்றம்!!


குறுவை சாகுபடி செய்யும் பரப்பினை அதிகரிக்க விவசாயிகளுக்கு 100% மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post