Random Posts

Header Ads

விவசாயிகளின் மண் மாதிரிகள் தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு மண்வள செயலியில் நேரடியாக பதிவேற்றம்!!



விவசாயிகளின் மண் மாதிரிகள் தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு மண்வள செயலியில் நேரடியாக பதிவேற்றம்!!


தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் தளிக்கோட்டை பஞ்சாயத்தில் விவசாயிகளின் மண் மாதிரிகள் தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு மண்வள செயலியில் நேரடியாக பதிவேற்றம் மதுக்கூர் வட்டாரம் தனிக்கோட்டை பஞ்சாயத்து 2023 24 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 



தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் வேளாண்மை ஆணையர் அவர்களின் அறிவுரைப்படி பஞ்சாயத்துக்கு 100 மண் மாதிரிகள் வீதம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உதவி அலுவலர்கள் துணையுடன் பெறப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மன் மாதிரி பெறப்பட்டு விவசாயிகளின் பெயர் தந்தை பெயர் நிலத்தின் பெயர் சாகுபடி செய்துள்ள பயிர் இனி சாகுபடி செய்ய உள்ள பயிர் மற்றும் விவசாயியின் தொலைபேசி எண் மற்றும் முகவரி ஒரு ஒரு துண்டு சீட்டில் எழுதி மண் மாதிரி பாக்கெட்டில் வைக்கப்படும். 


மண் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் குறிப்புகளை குறித்து கொண்டு மண்பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு நேரடியாகவோ வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ ஆய்வு முடிவு அறிக்கையினை வழங்கி வந்தனர். 



தமிழ்நாடு அரசு வேளாண் துறை மூலம் இவ்வாண்டு ஒரு சிறப்பு திட்டமாக ஒவ்வொரு மண் மாதிரி தனிப்பட்ட குறிப்பு குறியீடு எனும்Quick Reference code (QR Code) வழங்கப்பட்டு பெறப்பட்ட மண் மாதிரிகள் குறித்து அனைத்து விபரங்களும் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மண்மாதிரி  பையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் என வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட குறிப்பு குறியீடு அட்டை ஸ்கேன் செய்து இடப்படுகிறது. 


இதன் மூலம் மண் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் இந்த தனிப்பட்ட குறிப்பு குறியீட்டினை உரிய கருவி மூலம் ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவு செய்யப்படுகிறது. 



அதோடு விவசாயியினால் வழங்கப்பட்ட மண்மாதிரியின் படி நிலத்தின் தழை மணி மற்றும் சாம்பல் சத்து அளவு நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு கரிமச் சத்து அளவு அமில கார நிலைகள் மண்ணின் உவர் மற்றும் காரத்தன்மைகள் அதனை சரி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் மற்றும் மண்ணின் வளத்துக்கு ஏற்ப விவசாயி தேர்வு செய்து வழங்கும் பயிருக்கு இடவேண்டிய தலை மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களின் அளவுகள் மண்வள அட்டையில் நேரடியாக பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலியான  மண்வள சேவையில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. 


விவசாயிகள் தங்களுடைய செல்போன் எண்ணினை பதிவு செய்தவுடன் அவர்களுடைய மண் மாதிரிக்கான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நேரடியாக அவர்களுடைய செல்போனில் பார்த்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தமிழ்நாடு மண்வள செயலின் மூலம் தங்களுடைய செல்போன் எண் மற்றும் சர்வே எண்ணினை பதிவுசெய்து கடந்த வருடத்தில் வழங்கிய மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம். 



எனவே இவ்வருடம் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆவிக்கோட்டை நெம்மேலி கன்னியாகுறிச்சி பெரிய கோட்டை சொக்கநாவூர் அண்டமி மற்றும் தளிக்கோட்டை கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை வேளாண் உதவி அலுவலரிடம் தனிப்பட்ட குறிப்பு குறியீட்டுடன் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மண்மாதிரி மண்மாதிரி எடுக்கும்போது தங்கள் சாகுபடி செய்யும் பயிரின் வேரின் ஆழத்ததுக்கு தக்க ஏக்கருக்கு பத்து இடத்தில் மண் மாதிரி எடுத்து அதனை கால்பங்கீட்டு முறையில் அரை கிலோ விற்கு குறைவு செய்து உரிய விபரங்களை வேளாண் உதவி அலுவலரிடம் பதிவு செய்து மண்மாதிரியினை வழங்கிட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.





தனிக்கோட்டை பஞ்சாயத்தில் தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கி மண் மாதிரிகளை வேளாண் உதவி அலுவலர் ராமு விவசாயிகளிடம் பெற்ற போது எடுத்தது. உடன் வேளாண் அலுவலர் இளங்கோ அன்புமணி மற்றும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


வைக்கோல் கொள்முதல் செய்ய அலைமோதும் வியாபாரிகள்!


வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!


விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments