விவசாய உற்பத்தியை மேம்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.15000 மானியம்!!
விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் மாநில அரசின் வேளாண் துறை பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதில் விவசாயிகளின் சிரமத்தைப் போக்கிடும் வகையில் பலவகை பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல தோட்டக்கலைத்துறை மூலமும் தனியாக மானியம் வழங்கப்படுகிறது. வழக்கமாக செய்யும் விவசாய முறையில் இருந்து மாறுபட்டு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
இதற்காக பல்வேறு சலுகைகளையும் அதிகரித்து வருகிறது. அதன்படி தோட்டக்கலைத்துறை மூலம் தற்போது மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் 2023-24 செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம், ஹைட்ரோபோனிக்ஸ், மாடித்தோட்ட தளைகள், பழச்செடி தொகுப்புகள், காளான் குடில் அமைத்தல், வாழை பயிரினுள் ஊடுபயிராக காய்கறிகள் சாகுபடி செய்தல், பல்லாண்டு பயிர்களுக்கு ஊடுபயிராக காய்கறி பயிர்கள் சாகுபடி செய்தல், நெகிழி கூடை வழங்குதல் மற்றும் கறிவேப்பிலை பயிர்களில் ரசாயன பூச்சிக்கொல்லி எச்சம் பரிசோதித்தல் (Residue analysis) போன்ற இனங்களில் திட்டம் செயல்படுத்திட அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.
வீடுகளில் செங்குத்து தோட்டம் 40 சதுர அடியில் அமைக்க 50 சதவீத மானியம் ரூ.15000 வழங்கப்படுகிறது. ஹைட்ரோபோனிக்ஸ் அமைக்க 50 சதவீத மானியம் ரூ.15000 வழங்கப்படுகிறது.
வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க 6 செடி வளர்ப்பு பைகள், தென்னை நார்க்கழிவு கட்டிகள், 6 வகையான காய்கறி பொட்டலங்கள், உயிர் உரம், வேப்ப எண்ணெய் மருந்து மற்றும் கையேடு கொண்ட தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ஒரு பயனாளிக்கு அதிகப்பட்சமாக இரண்டு தொகுப்புகள் என ரூ.450 வசூல் தொகையுடன் வழங்கப்பட உள்ளது.
கொய்யா, நெல்லி, சீத்தா, எலுமிச்சை மற்றும் மா போன்ற 5 வகை பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியம் ரூ.150 மற்றும் வசூல் தொகை ரூ.50 என்று வழங்கப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
மாடித்தோட்டம் மற்றும் பூச்செடி தொகுப்புக்கு https://tnhorticulture.tn.gov.in/kit_new மற்றும் செங்குத்து தோட்டம், ஹைட்ரோபோனிக்ஸ் போன்றவைக்கு https://www.tnhorticulture.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
EB Connection name transfer தமிழ்நாடு முழுவதும் 30 நாட்கள் சிறப்பு முகாம் ரூ.726 சேவைக் கட்டணம்!!
பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ.14,000/- ஆட்சியர் அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...