EB Connection name transfer தமிழ்நாடு முழுவதும் 30 நாட்கள் சிறப்பு முகாம் ரூ.726  சேவைக் கட்டணம்!!


தமிழ்நாடு முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத் தாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” நேற்று தொடங்கிய நிலையில் ஒரு மாத காலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பயன்படுத்தலாம். இருப்பினும் அவற்றில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு 24.07.2023 முதல் ஒரு மாதக்காலத்திற்கு  சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை விடுமுறை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் (காலை 9 முதல் மாலை 5 வரை) இந்த முகாம் நடைப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெயர் மாற்றம் சிறப்பு முகாமில் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்


முன்னோர் இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு


1. ஆதார் அட்டை


2. நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் நகல்


3. நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல்



4. செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.


குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்படி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு-


1. நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் அல்லது வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம்



2. பில்டர்கள்/ டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள்/ குடியிருப்பு வளாகங்கள்/ குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின்வரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.


வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்


1. ஆதார் அட்டை


2. நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம்/ செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு



3. நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதி அல்லாத நிலையில், விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் ( பரிசு பத்திரம்/ செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை) அல்லது நீதிமன்ற உத்தரவு


விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில், நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். 


இதற்கான நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.726 (இதில் சேவைக் கட்டணமாக ரூ.615 மற்றும் ஜிஎஸ்டிக்கு ரூ.111 அடங்கும்). பொதுமக்கள் இந்த நேரடி சிறப்பு முகாமினை பயன்படுத்தி மின் இணைப்பு பெயர் மாற்ற தேவையினை பூர்த்தி செய்து பயனடையுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


100% மானியத்தில் ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி மற்றும் 25 கிலோ பொட்டாசு உரம்!!


பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ.14,000/- ஆட்சியர் அறிவிப்பு!!


மானிய விலையில் 106 பவர்டில்லர்கள் அதிக பட்சமாக ரூ.85000/- மானியத்தில் களையெடுக்கும் விசை கருவிகளுக்கு ரூ.63000/- !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post