பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ.14,000/- ஆட்சியர் அறிவிப்பு!!
விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக கருதப்படுகிறது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
கால்நடை வளர்ப்போர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் புதிய கால்நடைகளை கொள்முதல் செய்த பின்னர், உரிய அளவிலான தீவனம் மற்றும் தாது உப்புகள் வழங்கப்படாததினால் பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் விகிதாச்சார முறையில் உரிய நேரத்தில் உரிய அளவில் தீவனம் முறைகளை கடைபிடியாமை ஆகும். விவசாயிகளின் இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கால்நடைகளின் பராமரிப்புக்கென அனைத்து வங்கி கிளைகள் மூலம் உழவர் கடன் அட்டை 01.05.2023 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூபாய் 14,000/- வழங்கப்படுகிறது. இதற்குரிய வட்டி விகிதம் 4 சதவீதமாகும். ஒரு பசு மாடு என்பது 10 ஆடுகளுக்கும், 100 கோழிகளுக்கும் சமமாகும்.
எனவே கறவை மாடு, ஆடு மற்றும் கோழிப்பண்ணைகளின் பண்ணையாளர்கள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து கால்நடை பராமரிப்பு செலவினமாக குறைந்த வட்டி விகிததத்தில் வழங்கப்படும் தொகையினை பெற்று பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
வேளாண்மைத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற்றிருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில் பயன்பெற விரும்புவோர் அதற்குரிய,
1. விண்ணப்பம்
2. ஆதார் அட்டை நகல்
3. குடும்ப அட்டை நகல்
4. வங்கி கணக்கு புத்தக நகல்
5. பாஸ்போர்ட் புகைப்படங்கள் 2
6. கால்நடை கொட்டகை நில ஆவண நகல்
மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவர் அல்லது கால்நடை ஆய்வாளரிடம் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தனது செய்திக்குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மூலம் முன்னோடி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் விண்ணப்பதாரது வங்கி கிளைகளுக்கு அனுப்பி பரிசீலிக்கப்பட்டு உழவர் கடன் அட்டையுடன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலத்தை உழவு செய்ய ரூ.1250 உழவு மானியம்!!
PM கிசான் 14வது தவணை 8.5 கோடி விவசாயிகளுக்கு ஜூலை 28-ல் வெளியிடப்படும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...