PM கிசான் 14வது தவணை  8.5 கோடி விவசாயிகளுக்கு ஜூலை 28-ல் வெளியிடப்படும்!!


பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 14வது தவணை வழங்கும் தேதியை மத்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 8.5 கோடி பயனாளிகளின் 14வது தவணையை ஜூலை 28, 2023 அன்று காலை 11.00 மணியளவில் ராஜஸ்தானின் சிகாரில் இருந்து விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வங்கி கணக்குகளுக்கு மாற்றுவார்.



PM கிசான் தவணை தொகை


இந்தத் திட்டம் ஆண்டு வருமான ஆதரவாக ரூ. 6000 வழங்குகிறது, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், பணம் மூன்று சமமாக தலா ரூ.2000மாக வழங்கப்படுகிறது. பயனாளியின் ஆதார் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (DBT) செயல்படுத்தப்பட்ட அல்லது ஆதார் மற்றும் NPCI-யுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் இல்லாத விவசாயிகள், உடனடியாக தங்கள் உள்ளூர் தபால் நிலையத்தையோ அல்லது CSC மையங்களையோ அணுகி இதனை சரிசெய்துகொள்ளவும்.


PM கிசான் eKYC


PM Kisan வலைத்தளத்தின்படி, “PMKISAN பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம். 



ஆன்லைனில் eKYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது


  • PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் https://pmkisan.gov.in/


  • பக்கத்தின் வலது பக்கத்தில் கிடைக்கும் eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்.

  • உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை அதாவது 'search' என்பதை கிளிக் செய்யவும்.


  • ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.


  •  'Get OTP' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP ஐ உள்ளிடவும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


PM கிசான் பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்


  • 1 அதிகாரப்பூர்வ PM KISAN போர்ட்டலுக்குச் செல்லவும்  https://pmkisan.gov.in/


  • பார்மர் கார்னர் அதாவது Farmers corner' என்பதன் கீழ் 'பயனாளிகள் பட்டியல் அதாவது Beneficiary List' என்பதைக் கிளிக் செய்யவும்.


  • மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி, கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


  • அதன் பிறகு 'Get Report' என்பதை கிளிக் செய்யவும்.



மேலும் படிக்க....


65 கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு பவர்டில்லர் மற்றும் களை எடுக்கும் கருவிகள் 50% மானியத்தில்!!


குறுவை சாகுபடி செய்யும் பரப்பினை அதிகரிக்க விவசாயிகளுக்கு 100% மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரம்!!


தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.






Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post