65 கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு பவர்டில்லர் மற்றும் களை எடுக்கும் கருவிகள் 50% மானியத்தில்!!
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர்டில்லர் / களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.105.08 இலட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட 65 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலியில் (Online) மூலமாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இத்திட்டம் தொடர்பான முழுவிவரங்களைப் பெற்றிட கீழ்க்காணும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை விரிவாக்க மையம், சிவில் சப்ளைஸ் கிடங்கு பின்புறம், அண்ணாமலைநகர், வசந்தபுரம் அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம், நாமக்கல்-600 002, போன் - 04286 290084.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
உதவி செயற்பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறை, 2/607, RTO அலுவலகம் (அருகில்), ஆண்டிபாளையம் அஞ்சல், வரகூராம்பட்டி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - 637 214. போன்-04286 290517.
மேலும் படிக்க....
குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள்!!
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு 100 சத மானியத்தில் இரண்டு தென்னங்கன்றுகள்!!
விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...