சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தலா ரூ.15000/- ஆட்சியர் அறிவிப்பு!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளின் நிலத்தடி நீர்பாசனத்துக்கு உதவிடும் வகையில் 150 விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக, புதிய மின் மோட்டார் பம்பு செட் வாங்குவதற்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தலா ரூ.15000/- ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள, அல்லது 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள், அல்லது பழைய திறனற்ற மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பம் உள்ளவர்கள், என அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம்.
மேலும் புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்து புதிய மின் மோட்டார் பம்பு செட்டு வாங்க விரும்புபவர்கள் பட்டா, சிட்டா அடங்கல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல்துறை அலுவலகங்களை அணுகலாம். வீதம் ரூ.22.50 இலட்சம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் நுண்ணீர் பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.
மின் மோட்டார்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ.15000/- அல்லது மின் மோட்டார் பம்பு செட்டின் மொத்த விலையில் (GST தொகையையும் சேர்த்து) 50%. இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. கைபேசிஎண் 99529 52253.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631 502. அலைபேசி எண் 044- 24352356. கைபேசி எண்: 90030 90440.
மேலும் படிக்க....
100% மானியத்தில் ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி மற்றும் 25 கிலோ பொட்டாசு உரம்!!
நிலுவையில் இருந்த விவசாயிகளின் காப்பீட்டுத் தொகை ரூ. 258 கோடி வெளியீடு!!
பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ.14,000/- ஆட்சியர் அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...