விவசாயிகள் கவனத்திற்கு PM கிசான் திட்டத்தின் 18வது தவணைத் தொகை பெற இது கட்டாயம்!!
PM கிசான் திட்டப்பலன்களை பெற சில அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. PM கிசான் திட்டத்தின் 18வது தவணைத் தொகை ரூ. 2000 வரும் அக்டோபர் மாதம் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 18வது தவணையை பெறுவதற்கு விவசாயிகள் சில முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும். முதலாவதாக, விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக விவசாயிகள் கே.ஒய்.சி. KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும்.
கே.ஒய்.சி செயல்முறை மிகவும் எளிதான முறையில் செய்து முடித்துவிடலாம். கே.ஒய்.சி.-ஐ பதிவு செய்வதற்கு இந்தத் திட்டத்தின் https://pmkisan.gov.in/ அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில், 'eKYC'பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
'eKYC' பிரிவைத் தேர்வு செய்த பிறகு அதில் உங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு 'search' என்பதை அழுத்த வேண்டும். அப்படி நீங்கள் 'search' என்பதை அழுத்தியவுடன், உங்கள் கைபேசிக்கு OTP வரும், அந்த OTP-ஐ பதிவு செய்ய வேண்டும். இந்த எளிய முறையில் விவசாயிகள் தங்களின் 'KYC'-ஐ முடித்துவிடலாம்.
அதேபோல், நீங்கள் பயணாளரா என்பதையும் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் அறியலாம். இதற்கு நீங்கள் https://pmkisan.gov.in/ எனும் இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில், கிசான் கார்னர் எனும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் பயனாளர்கள் பட்டியலை நீங்கள் கண்டறியமுடியும்.
அதில், உங்கள் கிராமம், தாலுகா, மாவட்டம் மற்றும் மாநிலத்தை தேர்வு செய்தால் உங்களுக்கு தரவுகள் கிடைக்கும் அதில் நீங்கள் பயணாளரா இல்லையா என்பதை கண்டறியலாம்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...