விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!



விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


தஞ்சாவூர் வட்டாரத்தில் விதை உற்பத்தி பதிவு செய்யும் விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறை மூலம் ஒருநாள் தொழில் நுட்ப பயிற்சி குருவாடிப்பட்டி கிராமத்தில் 24.09.24 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் தஞ்சாவூர், விதைச்சான்று அலுவலர் (தொ.நு.) திருமதி .எஸ். ஹசீனாபேகம் அவர்கள் விதையின் முக்கியத்துவம், விதைப்பண்ணை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் முறைகள் குறித்து விளக்கினார். அம்மாப்பேட்டை, விதைச்சான்று அலுவலர் திரு. க.பிரபு அவர்கள் விதைப்பண்ணையில் ஒவ்வொரு கட்டத்திலும் கலவன்கள் அற்ற விதைகளை உற்பத்தி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.



பூதலூர், விதைச்சான்று அலுவலர் செல்வி. ஜ.மகேஸ்வரி அவர்கள் விதைசத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு பணி மற்றும் சான்றட்டை பணி குறித்தும் விளக்கினார். தஞ்சாவூர், விதைச்சான்று அலுவலர் திருமதி. 6. சங்கவி அவர்கள் விதைப்பண்ணைகளில் களை நிர்வாகம், உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகங்கள் குறித்த தொழில்நுட்பங்களை கூறி அவற்றை உரிய காலத்திலும் தகுந்த அளவையும் பயன்படுத்தி விதைப்பண்ணை விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற்று இலாபம் பெற வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

மேலும், தஞ்சாவூர் வட்டார வேளாண்மை அலுவலர் திரு. பொ. தினேஷ்வரன் அவர்கள் குறுகிய கால துவரை பயிர் சாகுபடி மூலம் பயிர் சுழற்சி செய்வது குறித்தும் உயிர்உர பயன்பாட்டு முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.

இந்த பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி விதை அலுவலர் திரு. ஞ.ராபர்ட் பெல்லார்மென் மற்றும் திரு. இரா. கி. சரவணன் அவர்கள் செய்திருந்தார்கள். இப்பயிற்சியில் தஞ்சாவூர் வட்டாரத்தைச் சார்ந்த அனைத்து விதைப்பண்ணை விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



(ஓம்/- து. கோபாலகிருஷ்னண்) விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர், தஞ்சாவூர்.

தகவல் வெளியீடு


சங்கீதா Msc.agri,

விதை சான்று அலுவலர் 

பட்டுக்கோட்டை.


மேலும் படிக்க....


விதை உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி!!


வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments