விதை உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி!!


அம்மாப்பேட்டை வட்டாரத்தில் விதை உற்பத்தி பதிவு செய்யும் விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறை மூலம் ஒருநாள் தொழில் நுட்ப பயிற்சி வடபாதி கிராமத்தில் 20.09.24 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், திரு. கோ.மோகன் அவர்கள் பயிற்சியினை துவக்கி வைத்து விதைப்பண்ணை விவசாயிகளுக்கு விதை உற்பத்தி மற்றும் விதை சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தும் நெல் அறுவடைக்கு பிறகு பசுந்தாள் உரபயிர்களை பயிரிட்டு மடக்கி உழவு செய்யும் பழக்கத்தை கடைபிடித்து மண்ணின் வளத்தை மேம்படுத்தி தரமான விதை உற்பத்தி செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். விதைப்பண்ணை பதிவு செய்யும் முறைகள் குறித்தும் தேவையான ஆவணங்கள் மற்றும் விதையின் முக்கியத்துவம் குறித்தும் தஞ்சாவூர், விதைச்சான்று அலுவலர் திருமதி. ச.சங்கவி அவர்கள் விளக்கினார்.



அம்மாப்பேட்டை, விதைச்சான்று அலுவலர் திரு. க.பிரபு அவர்கள் விதைப்பண்ணையில் ஒவ்வொரு கட்டத்திலும் கலவன்கள் அற்ற விதைகளை உற்பத்தி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தஞ்சாவூர், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் திரு.து. கோபாலகிருஷ்ணன் அவர்கள் விதைப் பண்ணைகளில் விதை உற்பத்தியினை அதிகரிப்பதற்குண்டான தொழில்நுட்பங்கள் குறிப்பாக,


களைக்கொல்லிகள் பயன்படுத்தும் முறை, இரசாயன உரங்களை அளவுக்கு அதிகமாக ஈட்டுவதை தவிர்த்து சமச்சீரான உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை அதிகளவு பயன்படுத்தும் முறை, பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள், அறுவடை மற்றும் அறுவடைக்கு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய தரங்கள் குறித்தும், விதையின் முளைப்புத்திறன் மற்றும் பிறரக கலவன்கள் இல்லாமல் விதை உற்பத்தி செய்து விதை உற்பத்தியினை ஒரு இலாபகரமான தொழிலாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எடுத்து கூறினார்.





இந்த பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி விதை அலுவலர் திரு. வி.ஞானசுந்தர் மற்றும் திரு. அ.சூரியமூர்த்தி அவர்கள் செய்திருந்தார்கள். இப்பயிற்சியில் அம்மாபேட்டை வட்டாரத்தைச் சார்ந்த அனைத்து விதைப்பண்ணை விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர், தஞ்சாவூர்.

தகவல் வெளியீடு

சங்கீதா Msc.agri,

விதை சான்று அலுவலர் 

பட்டுக்கோட்டை.



மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post