பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி நடைபெற்றது!!
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பாக வேளாண் உதவி இயக்குனர் திருமதி திலகவதி அவர்கள் வழிகாட்டுதலின்படி வேளாண் கண்காட்சி மதுக்கூர் அருகே அத்திவெட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதில் வேளாண் மாணவர்கள் இயற்கை மூலப்பொருள்கள், இரசாயன மூலப் பொருள்கள், உயிரியல் காரணிகள், காட்சிப்படுத்தினர். அவை இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் அட்டை பொறி, விளக்கு பொறி. பாரம்பரிய நெல் வகைகள் - இரத்த கவுனி, தங்க சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா மற்றும் தென்னையை தாக்கும் பூச்சிகள் - சுருள் வடிவ வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, சாம்பல் நிற வண்டு. இயற்கை இடுபொருட்களான பசுந்தாள் உரம், அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், பூச்சிவிரட்டி மற்றும் தென்னையில் நோய் தாக்கம் - தஞ்சை வாடல் நோய், சாம்பல் கருகல் நோய், தென்னை கரும்பூஞ்சான் நோய் மற்றும் மா, உளுந்து, வேர்கடலை போன்ற பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் நெல் வயலில் வளரும் களைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் இயற்கை தென்னை விவசாய குழுவின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை தஞ்சை ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்டனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!
கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!
விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...