தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு ₹43.13 கோடி இழப்பீடு!!


கிராமவாரியான இழப்பீடு பட்டியல் Click to Download...... 


வங்கி கணக்கில் வரவுவைப்பு


சம்பா சாகுபடியில் பயிர்க் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.13 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டு (ராபி/ சம்பா பருவத்தில் இப்கோடோக்கியோ,ப்யூர்சர் ஜெனரலி ஆகிய காப்பீடு நிறுவனங்களில் விவசாயிகள் பயிர்க்காப்பீடு பரீமியம் செலுத்தியிருந்தனர்.



இதனிடையே, கடந்தாண்டு சம்பா பருவத்தின் போது ஒரு கிராமத்தில் மொத்தமுள்ள விளை நிலங்களில் 75 சதவீத பரப்பளவுக்கு சாகுபடி செய்யாமல் இருந்தால், கிராம நிர்வாக அலுவலரிடம் அதற்கான சான்றைபெற்று பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யப்பட்டு பயிர்க் காப்பீடு செய்த தஞ்சாவூர், பூதலூர் மற்றும் திருவையாறு உள்ளிட்ட 45 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 22.44 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 


இதையடுத்து. சம்பா சாகுபடியின்போது காப்பீடு நிறுவன பிரதிநிதிகள், வேளாண்மை துறை, வருவாய்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள், வருவாய் கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை செய்து மகசூல் கணக்கீடு செய்யப்பட்டது. 


இதன்படி, சம்பா நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனம் சார்பில் 115 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.11.51 கோடி இழப்பீடு தொகையும் இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனம், இதன்படி 60 கிராமங்களைச் சேர்ந்தவிவசாயிகளுக்கு ரூ.9.18 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது.



தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பாபருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.43.13 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 2024-25- ல் குறுவை பருவத்திற்கு தஞ்சாவூர், பூதலூர் உள்ளிட்ட 44 கிராமங்களுக்கு விதைக்க இயலாத நிலையின் கீழ் பயன்பெறும் வகையில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு இழப்பீட்டுத்தொகை வழக்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கடந்த 2021-2022 ஆண்டில் ரூ.0.35 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ. 1.120 கோடியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 2023-24 சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு பிரமியம் செலுத்திய விவசாயிகளுக்கு பல மடங்கு கூடுதலாகமொத்தம் ரூ. 43.13 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


மக்காச்சோளப் பயிா்களுக்கு ரூ. 104.44 கோடி இழப்பீடு! மாவட்ட ஆட்சியா் தகவல்!!


விவசாயிகளுக்கு கிராம சபா கூட்டத்தில் உளுந்து விதை மானியத்தில் வழங்கல்!!


உணவு உற்பத்திக்கான சவாலை எதிர்கொள்ளும் திறமையான சிக்கனமான சுற்றுச்சூழலுக்கு நட்பார்ந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post