அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் 50 விவசாயிகள் அங்கக பண்ணையம்!!



அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் 50 விவசாயிகள் அங்கக பண்ணையம்!!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் அங்கக பண்ணையம் குறைத்த மாவட்டத்திற்குள் விவசாயிகள் சுற்றுலா இடத்தில் பேராவூரணி வட்டாரம் சீதாம்பால்புரம் கிராமத்திற்கு மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 50 விவசாயிகளை அழைத்துச் செல்லப்பட்டது.



அங்கு இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வரும் 20 வருடம் அனுபவம் உள்ள விவசாயி திரு .சுரேஷ் அவர்களது பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அவர் தற்சமயத்திற்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் அதில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் மேலும் ரசாயனம் இல்லாத முற்றிலும் இயற்கையான முறையில் டானிக் ,களைக்கொல்லி மற்றும் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அமிர்த கரைசல், மீன் அமிலம், ஜீவாமிர்தம், தேமோர் கரைசல் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்பன குறித்து விவசாயிகளிடம் தனது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.



சுற்றுலாவிற்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு .ராஜு மற்றும் திரு. அய்யாமணி ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி. சி .சுகிதா விவசாயிகளுக்கு மற்றும் பயிற்றுனருக்கு நன்றி தெரிவித்தார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!


மக்காச்சோளப் பயிா்களுக்கு ரூ. 104.44 கோடி இழப்பீடு! மாவட்ட ஆட்சியா் தகவல்!!


விவசாயிகளுக்கு கிராம சபா கூட்டத்தில் உளுந்து விதை மானியத்தில் வழங்கல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments