தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!!
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ம் தேதி வரை மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும்வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி வொர்த் எஸ்டேட், கோவை சோலையாரில் தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில இடங்களில் மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
இதேபோல், இன்று முதல் 11ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
ஆதாரில் இருந்து உயிரிழந்தவர்களின் பெயரை நீக்க புதிய வசதி அறிமுகம்!!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!!
விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...