விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!
விவசாயிகள் ஆழ்துளை கிணறு, நுண்ணீர் பாசம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தோட்டக்கலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்கள் 1,10,000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, இதர காய்கறிகள், மலர்கள், கண்வலிக்கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பலதரப்பட்ட தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடனும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த நீரில் அதிக மகசூலை பெறும் நோக்கில் இத்திட்டம் அனைத்து வட்டாரத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். 2025-26-ஆம் நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,747 எக்டர் பரப்பளவிற்கு ரூ.37.63 கோடி நிதி இலக்கு பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு துணை நிற்கும் செயல்பாடுகளான பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு அல்லது குழாய்கிணறு அமைத்தல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.25,000-க்கு மிகாமலும், டீசல் பம்பு செட் அல்லது மின் மோட்டார் நிறுவதல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.15,000-க்கு மிகாமலும், பாசனக்குழாய்களை நிறுவுதல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.10,000-க்கு மிகாமலும், பண்ணைக்குட்டை அமைத்தல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.75,000-க்கு மிகாமலும் நுண்ணீர் பாசனத்திற்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள்
- சிட்டா
- அடங்கல்
- குடும்ப அட்டை நகல்
- ஆதார் அட்டை நகல்
- வங்கி கணக்கு புத்தக நகல்
- (3.5X4.5 cm) அளவுள்ள பாஸ்போர்ட் போட்டோ-2
ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கைலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் அல்லது MIMIS https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மற்ற மாவட்டத்தினர் உங்கள் பகுதியில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ளவும்.
மேலும் படிக்க....
மழை அலர்ட்! அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை மையம் தகவல்!
விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!
வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற இந்த வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்..!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...