வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற இந்த வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்..!!
தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு அனுமதி பெறாமல் போடப்பட்ட வீட்டுமனைகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அனுமதி அளித்த குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அனுமதி பெறாத மனைகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க புதிய வெப்சைட் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண். 05-ல் "20.10.2016 முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்குமுன் பதிவுசெய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும், இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்" என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 01.07.2025 முதல் www.onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும், திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர் புறவளர்ச்சித் துறை அரசாணை எண். 70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது போன்று, மலையிடப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்துவதற்கான விண்ணப்பங்களை 01.07.2025 முதல் 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
இனி குழந்தை பிறந்த உடனே பிறப்புச் சான்றிதழ் 'நோ வெயிட்டிங்' - மத்திய அரசு கொடுத்த அப்டேட்!!
விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!
தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து தென்னை விவசாயிகளுடன் கலந்தாய்வு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...