இனி குழந்தை பிறந்த உடனே பிறப்புச் சான்றிதழ் 'நோ வெயிட்டிங்' - மத்திய அரசு கொடுத்த அப்டேட்!!


சீக்கிரம் கிடைக்கும் பிறப்புச் சான்றிதழ்


சுமார் 143 கோடிக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற அரசு ஆவணங்களை அனைவரும் பெற வேண்டியது முக்கியம். இவற்றை விட இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்பதற்கு அடையாளமான பிறப்புச் சான்றிதழும் மிக முக்கியமாகும். குழந்தை பிறந்த உடன் சில நாள்களில் பிறப்பு சான்றிதழும் வழங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழ்தான் அனைத்து அரசு ஆவணங்களை பெறுவதற்கும் முக்கியமானதாகும்.


அப்படியிருக்க இந்தியப் பதிவாளர் ஜெனரல் (Registrar General Of India - RGI) தற்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி குழந்தை பெற்றெடுத்த பின்னர் அந்த தாய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் முன்னரே அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம். 


இதுகுறித்து RGI கடந்த ஜூன் 12ஆம் தேதி வெளியிட்ட கடிதத்தில், "பதிவு செயல்முறையை சீராகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றும் முயற்சியில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969இல் திருத்தங்களின் கீழ், பிறப்பு மற்றும் இறப்புகளின் மாநில பதிவு விதிகளில் தொடர்புடைய திருத்தம், ஒரு புதிய மத்திய CRS (Civil Registration System) இணையதளத்தை உருவாக்குதல் உள்ளிட்ட சிவில் பதிவு முறையை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது"  என குறிப்பிட்டுள்ளது. 


மேலும் அந்த கடிதத்தில், "பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எனவே, இதை கணக்கில் வைத்து, புதிதாக பிறந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு சான்றிதழ் வழங்கப்படுவது முக்கியமாகும். குறிப்பாக குறிப்பாக  50% குழந்தை பிறப்புகள் நடக்கும் அரசு மருத்துவமனைகள் பிறப்புச் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. 


பிறந்த குழந்தைகளில் சுமார் 10% பேர் பிறப்புச் சான்றிதழை பெறுவதில்லை என RGI அதன் ஆய்வில் மூலம் தெரிந்துகொண்டுள்ளது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிறப்பு மற்றும் இறப்பை 21 நாள்களில் பதிவு செய்ய வேண்டும் என்று RGI எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், பல மருத்துவ நிறுவனங்கள் இந்த விதியை சரியாக பின்பற்றுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. 


பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணமான பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் ஆகியவை குறிப்பிடப்படும். இதுதான் அடையாள சான்றாகவும், வயது சான்றாகவும், குடிமகனுக்கான சான்றாகவும் இருக்கும். இதனை வைத்தே பல்வேறு அரசு சேவைகள், ஆவணங்களை பெற வேண்டும். 


குறிப்பாக, பள்ளிக் கூடங்களில் சேர்வதற்கும், வாரிசு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் முக்கியம் ஆகும். பல மாநிலங்கள் அதன் இணையத்தளத்திலேயே ஆன்லைனில் பதிவு செய்ய வழிவகை செய்கின்றன. crsorgi.gov.in என்ற தேசிய இணையதளத்திலும் பதிவு செய்யலாம். விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செயது, அதனை பிரிண்ட் எடுத்து, பதிவுத்துறை அலுவலகத்தில் மற்ற தேவைப்படும் ஆவணங்களுடன் சென்று இதை சமர்பிக்க வேண்டும். 


மேலும் படிக்க....


தஞ்சை பகுதிக்கேற்ற சம்பா பருவத்திற்கான நெல் இரகங்கள்!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி நடைபெற்றது!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post