தஞ்சை பகுதிக்கேற்ற சம்பா பருவத்திற்கான நெல் இரகங்கள்!!
பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேளாண்பயிர்களின் உற்பத்தியை பன்மடங்கு பெருக்க வேண்டியது இன்றைய தேவையாகும். விதைகள், உற்பத்தியை பெருக்குவதிலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தஞ்சை மாவட்டத்தில், நடப்பு சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டு தற்பொழுது சாகுபடி பணிகள் துவங்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ள விவசாய பெருமக்கள், நம் பகுதிக்கு ஏற்றவாறு உயர் விளைச்சல் தரக்கூடிய சான்று பெற்ற நெல் இரகங்களை தேர்வு செய்து அதற்கேற்ற சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் உயர் மகசூல் பெற முடியும். உயர் மகசூலிற்கு அடிப்படை நல்ல தரமான விதைகளே.
தரமான சான்று விதைகள் உற்பத்தியை பெருக்குவதிலும் அதனை நிர்வகிப்பதிலும் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்துறையின் மூலம் சான்று செய்யப்பட்ட நீண்ட சான்று செய்யப்பட்ட நீண்ட கால நெல் இரகங்களான சி.ஆர்.1009 சப்-1, சாவித்திரி மற்றும் ஆடுதுறை 51 போன்றவை ஒரு போகமாக சாகுபடி செய்யப்பட உள்ள பகுதிகளுக்கு ஏற்றவையாகும். பின் சம்பா, தாளடி பருவத்திற்கு (செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி 15 முடிவடையும்).
ADT-38, ADT-39, ADT-42, ADT(R)46, ADT-52, CO(R)50, CO-48, CO-49, CO-43,IR- 20, ADT-54, TRY-3, TRY-4 மற்றும் TKM-13 போன்ற இரகங்கள் பின் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு ஏற்றவையாகும்.
நெல் விதை வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை, விதைச்' சான்றளிப்புத் துறையினரால் வழங்கப்பட்டிருக்கும் சான்று அட்டை பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். எவ்வித விபரம் இல்லாமல் முட்டைகளில் விற்பனை செய்யப்படும் விதையை வாங்க கூடாது.
சான்று அட்டைகளில் பயிரின் இரகம், விதைப்பரிசோதனை நாள், காலக்கெடுதேதி போன்ற விபரங்கள் இருக்கும். இதன் மூலம் காலாவதியான விதையை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
விதைப்பையின் மீது விதைச்சான்று துறையின் முத்திரைச்சின்னம், வாசகங்கள் காணப்படாமலும், சான்று அட்டை இல்லாமலும் இருந்தால் அவ்விதைகளை வாங்க கூடாது. விதை வாங்கும் போது அதற்குண்டான இரசீது கேட்டு பெறுவது மிக அவசியமாகும்.
சில நெல் இரகங்கள் குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் மட்டுமே நன்றாக வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும். பிற மாநில நெல் இரகங்களை தேர்வு செய்யும் போது மிக கவனமாகவும், நம் பகுதிக்கு ஏற்புடையதாக உள்ளனவா என்பதை உறுதி செய்து பயிரிட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் இரகம் விவசாயிகளுக்கும், விற்பனைக்கும் ஏற்ற உயர் விளைச்சல் தரக்கூடிய நெல் இரகமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எந்த இரகமாக இருப்பினும் சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்வது உயர் விளைச்சலை உறுதி செய்யும் என இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் திரு.து.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் தஞ்சாவூர்.
தகவல் வெளியீடு
சங்கீதா Msc.agri,
விதை சான்று அலுவலர்
பட்டுக்கோட்டை.
மேலும் படிக்க....
விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!
விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!
பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...