பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு 2.5 லட்சம் மதிப்பிலான வேளாண் இடு பொருட்கள்!!
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை 2.5 லட்சம் மதிப்பிலான வேளாண் இடு பொருட்களை பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு வழங்கினார்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் குறுவை தொகுப்பு திட்டம் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் தேசிய எண்ணை வித்துக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றின் கீழ் இலக்குகள் பெறப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் 50% மானிய விலையில் வழங்குவதற்கு பட்டுக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜிங்க்சல்பேட் நெல் நுண்ணூட்டம் பயறு நுண்ணூட்டம் கடலை நுண்ணூட்டம் சூடோமோனஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள் பதிவு செய்த விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் 50% மானியத்தில் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பீட்டில் 50 விவசாயிகளுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள் இன்று பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கினார் .
மேலும் தஞ்சை மாவட்ட விதை சான்றளிப்பு துறையின் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கடந்த நிதியாண்டில் முழுமையாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு பல்வேறு ஆய்வுகளுக்கு பின் தேறிய செண்டாங்காடு மற்றும் அணைக்காடு கிராம பி கே வி ஒய் திட்ட வேளாண் குழுவினருக்கு ஸ்கோப் சான்றிதழ்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மூலம் இரு குழுக்களுக்கும் வழங்கி நஞ்சில்லா உணவு உற்பத்தியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார்.பின் தோட்டக்கலைத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு நெட்டை தென்னங்கன்றுகள் வீட்டு காய்கறி தோட்ட விதைகள் மற்றும் பண்ணை கருவிகள் மானியத்தில் விவசாயிகளுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.
வேளாண் உதவி இயக்குனர் பட்டுக்கோட்டை பொறுப்பு திலகவதி வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி தோட்டக்கலை துறை திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். வேளாண் அலுவலர் சன்மதி விதை சான்று அலுவலர் சங்கீதா நவீன் சேவியர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் கார்த்திகா ஆகியோர் விவசாயிகளுக்கு அரசு மானிய திட்டங்கள் மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள் அதன் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
வேளாண் உதவி அலுவலர்கள் ராஜ்குமார் சரவணன் பாண்டியன் சித்ரா ஜெயபாரதி மற்றும் ரமணி தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கண்ணன் கோபி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். அட்மாதிட்ட அலுவலர்கள் ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!
விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!
பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...