மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் வேப்பங்கன்றுகள்!!



மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் வேப்பங்கன்றுகள்!!


தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 100 சத மானியத்தில் வேப்பங்கன்றுகள் விநியோகம். மதுக்கூர் வட்டாரத்தில் இந்த நிதியாண்டில் தமிழக முதல்வரின் நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்த வழிமுறை வழங்கப்பட்டுள்ளது.



இது மண்ணின் தரத்தை மேம்படுத்துவதையும் சமூகத்தில் நல்வாழ்விற்காக நிலையான மற்றும் வேதிப்பொருட்கள் இல்லாத வேளாண் நடைமுறைகளை நோக்கி நகர்வதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒருபடியாக வேம்பு மரங்களின் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக தரமான வேப்பங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.




மதுக்கூர் வட்டாரத்திற்கு 3750 வேப்பங்கன்றுகள் 100% சத மானியத்தில் வழஙக இலக்கு அதன்படி வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் சுஜாதா அவர்களின் வழிகாட்டுதல் படி மதுக்கூர் வட்டார வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் மற்றும் ராமு ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.



வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வாட்டா குடி உக்கடை ஊராட்சி மன்ற தலைவர் மன்னாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உலயகுன்னம் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்தனர்.



வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் அய்யா மணி ஆகியோர் வேப்பங்குளம் கிராமத்தில் வேப்பங்கன்றுகள் விவசாயிகள் நடவு செய்த பணியினை ஆய்வு செய்தனர்.







தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments