பட்டுக்கோட்டை வட்டாரத்தில் விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் அவர்களின் ஆய்வு!!


விதைச் சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் தஞ்சாவூர் திரு. D. கோபாலகிருஷ்ணன் அவர்கள் 26 .7 .24 இன்று வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பட்டுக்கோட்டையில் ADT 38 (வல்லுநர் நிலை) நெல் ரகத்திற்கான விதைக்குவியலை பார்வையிட்டார்.


மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் பட்டுக்கோட்டை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு சுத்தி நிலையத்திற்கு வரப்பெற்ற விதை குவியல்கள் உடனடியாக சுத்தி பணி செய்து, சான்றட்டைப் பொருத்தி வேளாண் விரிவாக்க மையங்களுக்கு உரிய காலத்தில் அனுப்பி விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதைகள் கிடைக்க விதை சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது .



அதனைத்தொடர்ந்து சொக்கநாதபுரத்தில் அமைக்கப்பட்ட ADT 53 (சான்று நிலை ) நெல் ரக விதை பண்ணை வயலானது ஆய்வு செய்த போது உரிய காலத்தில் நெல் அறுவடை செய்து பரிந்துரைக்கப்பட்ட ஈரப்பதத்துடன் விதை குவியல்கள் விதை சுத்தி நிலையம் அனுப்பி வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் அறுவடை செய்த பின் பயிர்சுழற்சி முறையில் பசுந்தாள் உரப்பயிரினை பயிரிட்டு மடக்கி உழவு செய்யுமாறு விவசாயிடம் அறிவுரை வழங்கினார்.


இதேபோல் சித்தாத்திக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட நிலக்கடலை GG 34 (ஆதார நிலை 1) ரகத்திற்கான விதைப்பண்ணை வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது அனைத்து நிலக்கடலை செடியில் இருக்கும் அனைத்து விழுதுகளும் மண்ணுக்குள் இறங்கி காய் பிடிப்பதற்கு விழுது மண்ணுக்குள் இறங்கும் தருவாயில் தகர உருளை வடிவ டின் கொண்டு செடியின் மேலே உருட்டினால் இன்னும் காய்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூலை அதிகப்படுத்தலாம் என விவசாயிக்கு விளக்கி கூறினார்.

ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர்கள் திரு வெங்கடாசலம் திருமதி . சங்கீதா சேதுபவாசத்திரம் மற்றும் பேராவூரணி ,உதவி விதை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தகவல் வெளியீடு

சங்கீதா Msc.agri,

விதை சான்று அலுவலர் 

பட்டுக்கோட்டை.


மேலும் படிக்க....


ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post