ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்!!

 


தஞ்சை மாவட்டம், மதுக்கூர் மட்டும் பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம். வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு டெல்டா விவசாயிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிப்புகளை தொடர்ந்து மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டாரங்களுக்கு தலா 25 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு உப திட்டங்களுடன் குறுவை தொகுப்பு திட்டம் வேளாண்மை இயக்குனர் தஞ்சாவூர் சுஜாதா அவர்கள் வழிகாட்டுதலுடன் குறுவை தொகுப்பு திட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.


மேட்டூர் அணையில் ஜூன் 12 பொதுவாக தண்ணீர் திறக்க இயலாத நிலையில் போர்வெல் மூலம் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது வேளாண் உற்பத்தியைப் பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.



நெல் பயிர் இயந்திரநடவு பின்னேரற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 4000 வீதம் வழங்கப்பட உள்ளது நுண்ணூட்டச் சத்து குறைபாடு உள்ள நெல் வயல்களில் நெல் நுண்ணூட்டச் சத்து கலவை 50 சத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அதோட துத்தநாகசத்தை குறைபாடு உள்ள இடங்களில் சுத்தமாக சல்பேட் உரம் ஏக்கருக்கு ரூபாய் 250 மானியத்தில் வழங்கப்பட உள்ளது.




ஜிப்சம் ஏக்கருக்கு ரூபாய் 250 மானியத்தில் வழங்கப்பட உள்ளது. நெல் சாகுபடி வாய்ப்பு இல்லாத இடங்களில் குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய பயிறு வகை பயிர் சாகுபடி செய்வதற்கு 50% மானியத்தில் தரமான உளுந்து விதைகள் சூடோமோனஸ் திரவ உயிர் உரம் மற்றும் இடைவெளி வரும் செழிப்பதற்கான பிண்ணேற்பு மானியத்துடன் ஏக்கருக்கு ரூபாய் 1200 வீதம் வழங்கப்பட உள்ளது.





நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு அடங்கல் கம்ப்யூட்டர் சிட்டா அவர்களுடைய வயல்களில் நின்று லேட்லாங்குடன் கூடிய புகைப்படம் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் மற்றும் எஸ் சி விவசாயிகள் எனில் ஜாதி சான்றிதழ் இரண்டு நகல்களில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மதுக்கூரில் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் வசம் சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.





இந்த விவசாயிகள் ஜூலை 15 குள்ளும் தற்போது நாற்றங்கால் நடவு செய்ய 10 தினங்களுக்கு மேலாகும் நிலையில் ஜுலை 25க்குள்ளும் சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உங்களுக்கு வேண்டிய திட்டத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் உடன் பயன் பெற வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.


ஒலயகுன்னம் கிராமத்தில் குருவை தொகுப்பு திட்டத்திற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு விவசாயிகளை திட்டங்களைப் பற்றி எடுத்து கூறி குருவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வடிவங்கள் வழங்கப்பட்டது. உடன் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி உதவி அலுவலர் முருகேஷ் அட்மா அலுவலர் சுகிதா மற்றும் ராஜு உள்ளனர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments