ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் 100% மானியத்தில் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள்!!
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் வழங்கிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாத்துரை தமிழக முதல்வர் இன்று ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை காணொலி மூலம் தமிழகம் முழுவதும் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மரத்துவரை,காராமணி,அவரை அடங்கியவிதைதொகுப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் தோட்டக்கலை துறை மூலம் காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது. பயறுவகை விதை தொகுப்பு இல்லங்களில் நடவு செய்ய ஏதுவான இடம் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு இவை வழங்கப்படுகிறது.
20% பெண்கள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமையில் வழங்கப்படும். மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆதார் குடும்பஅட்டை தகவலுடன் பதிவு செய்திருந்த 30 விவசாயிகளுக்கு இன்று பட்டுகோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாத்துரை மற்றும் வேளாண் துணை இயக்குனர் மாலதி ஆகியோர் வேளாண் துறையில் பதிவு செய்த 30 விவசாயிகளுக்கு பயறுவகை விதை தொகுப்பினை 100% மானியத்திலும் தோட்டகலைதுறையில் பதிவு செய்தவிவசாயிகளுக்கு வீட்டு காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு மற்றும் தோட்டகலை உதவி அலுவலர் ஜானகிராமன் மற்றும் சரவணன் செய்தனர்.வேளாண்அலுவலர் சரவணன் மற்றும் தோட்டகலைஅலுவலர் கார்த்திகா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் பயிற்சி!!
விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...