.jpeg)
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உளுந்து விதை பண்ணை ஆய்வு!!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் விவசாயி திரு . கோவிந்தராஜ் தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 8 ரக விதைப்பண்ணையினை கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை இயக்குனர் முனைவர் .ரவி கேசவன், பேராசிரியர் முனைவர். மணிவண்ணன் ,முனைவர். குமரேசன் மற்றும் வம்பன், பயறு வகை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர். யுவராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது விவசாயிடம் உளுந்து பயிர் சாகுபடி செய்த விவரத்தினை கேட்டறிந்தனர்.
விவசாயி கூறியதாவது
நான் தொடர்ந்து நெல், உளுந்து , நிலக்கடலை ஆகிய பயிர்களில் விதை பண்ணை அமைத்து தரமான விதையினை உற்பத்தி செய்து தருவதாகவும் மேலும் தற்போது நிலவி வரும் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் வராமல் தடுக்க முற்றிலும் இயற்கை வழியில் உள்ள இடுபொருட்களை மட்டும் பயன்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் இதனால் மஞ்சள் தேமல் நோய் தன்னுடைய உளுந்து பயரில் வராமல் நல்ல காய்கள் பிடித்துள்ளதாகவும் கூறினார்.
இதனை கேட்டறிந்த பேராசிரியர்கள் மேலும் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பண்ணை அமைக்கும் போது மஞ்சள் தேமல் நோய் இல்லாமல் பராமரிக்கப்பட்டு தரமான விதைகளையும் உற்பத்தி செய்ய முடியும் எனக்கூறி அந்த விவசாயிக்கு தேவையான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினர்.
இதேபோல் பேராவூரணி வட்டாரத்திலும் பைங்கால் கிராமத்தில் விவசாயி திரு.பன்னீர் வயலில் அமைக்கப்பட்டுள்ள வம்பன் 8 ரக உளுந்து விதை பண்ணை வயலையும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . இந்த விதைப்பண்ணை வயலும் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையில் பராமரிக்கப்பட்டு வருவதை விவசாயிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது விதை ஆய்வு துணை இயக்குனர் தஞ்சாவூர் திருமதி.சுஜாதா, விதை சான்று மற்றும் உயிர் மச்சான்று உதவி இயக்குனர் திரு. து. கோபாலகிருஷ்ணன், விதைச்சான்று அலுவலர்கள் வெங்கடாசலம் , சங்கீதா,விதை ஆய்வாளர்கள் முனைவர். நவீன் சேவியர், பாலையன், உதவி விதை அலுவலர்கள் முருகேசன், கார்த்தி, பூபேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல் வெளியீடு
து.கோபாலகிருஷ்ணன்
விதை சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் 100% மானியத்தில் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள்!!
மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் பயிற்சி!!
விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...