பட்டுக்கோட்டையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா!!
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு திருமதி.அப்சரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025- 26 திட்ட துவக்க விழா இன்று துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம் நாட்டுச்சாலை கிராமத்தில் மாண்புமிகு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை B.Sc, B.L அவர்களால் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் இடுபொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பட்டுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமதி. ராகினி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பேசுகையில் மக்கள் நலமும் நல்வாழ்வும் அவர்கள் உண்ணும் உணவைப் பொறுத்து அமைகிறது.
உடல் நலம் பேண ஊட்டச்சத்து மிக்க உணவினை உரிய அளவில் உட்கொள்வது இன்றியமையாதாகும். ஊட்டச்சத்துக்களை அழிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து வழங்கும் இந்த விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் திருமதி.மாலதி அவர்கள் பேசுகையில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயறு வகை தொகுப்பின் நன்மைகள் குறித்தும், பயறு வகை உற்பத்தியில் தன்னிறைவு பெற்று உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும் 2025-26 ஆம் ஆண்டில் பயறு பெருக்கத்திடம் செயல்படுத்தப்பட்டது
எனவும் இத்திட்டத்தில் வழங்கப்படும் புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி மற்றும் அவரை உள்ளிட்ட பயறு வகைகளை வளர்க்கும் பொருட்டு பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு பட்டுக்கோட்டை வட்டாரத்திற்கு 180 எண்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் காராமணி விதைகளை தென்னந்தோப்புகளில் சாகுபடி செய்வதால் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுக்குள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மாண்புமிகு சட்டமன்ற பட்டுக்கோட்டை வட்டார சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் விவசாயிகளுக்கு பயறு வகைத்தொகுப்பு, பழசெடிகள் தொகுப்பு மற்றும் காய்கறிகள் தொகுப்பு உள்ளிட்டவற்றை வழங்கினார்.
மேலும் இத்தொகுப்பில் பயறு வகை விதைகளான மரத்துவரை, காராமணி மற்றும் அவரை உள்ளிட்ட விதைகள் 25 கிராமும், காய்கறிகள் விதை தொகுப்பில் தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை விதைகளும் பழத்தொகுப்பில் கொய்யா, எலுமிச்சை மற்றும் பப்பாளி செடிகளும் வழங்கப்பட்டுள்ளது. இது நூறு சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் செண்டாங்காடு மற்றும் அனைக்காடு கிராம தொகுப்பு விவசாய தலைவர்களுக்கு வாய்ப்புச்சான்றிதழ் (Scope Certificate) மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, வேளாண்மை துணை இயக்குநர் மாலதி மற்றும் விதைச்சான்று அலுவலர் சங்கீதா அவர்களால் வழங்கப்பட்டது.
இறுதியாக பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை அலுவலர் திருமதி சன்மதி மற்றும் ஜெயபாரதி ஆகியோர் நன்றியுரை கூறினர்.
தகவல் வெளியீடு
E .அப்சரா
வேளாண்மை உதவி இயக்குனர்
பட்டுக்கோட்டை.
மேலும் படிக்க....
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உளுந்து விதை பண்ணை ஆய்வு!!
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் 100% மானியத்தில் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள்!!
விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...